24 special

குறிவச்ச இரை விழும்… 12 நிமிடத்தில் உலகை உறைய வைத்த இந்தியா! ‘புராஜெக்ட் விஷ்ணு

PMMODI
PMMODI

இந்தியா இனி யாரிடமும் அனுமதி கேட்கும் நாடு அல்ல; உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வல்லரசு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்திய பாதுகாப்புத் துறை எட்டியுள்ள உச்சத்தை உலக நாடுகள் இன்று ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றன. மணிக்கு சுமார் 3600 கிலோமீட்டர் வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில், இந்தியா நிகழ்த்திய 12 நிமிட தொடர் வெற்றிச் சோதனை, உலகப் போர் சமன்பாடுகளையே மாற்றும் சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது. குறி வைத்தால் இரை தவறாது விழும் என்ற நம்பிக்கையை ராணுவத்திற்கு அளிக்கும் இந்த சாதனை, இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு தங்க எழுத்தாக பொறிக்கப்படுகிறது.


இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிஆர்டிஎல் ஆய்வகம், ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய இந்த வெற்றி, வெறும் தரைவழி சோதனை என்று சொல்லி கடந்து போக முடியாத அளவுக்கு பெரியது. ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை இலக்கை தாக்க எடுக்கும் முழு பயண நேரத்துக்கு இணையாக, அதன் இதயமாக கருதப்படும் கம்பஸ்டர் பகுதி தொடர்ந்து 12 நிமிடங்களுக்கு மேலாக செயல்பட்டது என்பதே, இந்த ஆயுதம் போர்க்களத்திற்கு தயாராகிவிட்டது என்பதற்கான தெளிவான சைகை. கடந்த ஆண்டுகளில் படிப்படியாக நடந்த சோதனைகளின் உச்சமாக இந்த வெற்றி அமைந்துள்ளது என்பது, மோடி ஆட்சியின் நீண்டகால திட்டமிடலுக்கும், தெளிவான பார்வைக்கும் கிடைத்த பலனாகவே பார்க்கப்படுகிறது.

ஸ்க்ராம்ஜெட் என்ஜினுக்குள், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் காற்று பாயும் போது உருவாகும் ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பத்தை கட்டுப்படுத்துவது உலகின் மிகப் பெரிய அறிவியல் சவால்களில் ஒன்று. அந்த சவாலையும் இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் வென்று காட்டியுள்ளனர். ‘ஆக்டிவ்லி கூல்டு’ தொழில்நுட்பத்தின் மூலம், என்ஜின் உருகாமல் நிலைத்திருப்பதை உறுதி செய்த இந்த வெற்றி, இந்தியாவில் உருவாக்கப்பட்ட உலோகங்களும், வடிவமைப்பும் உலகத் தரத்திற்கு இணையானவை என்பதைக் உறுதிப்படுத்துகிறது.

இந்த சாதனை ஒரு தனி ஆயுதத்திற்கானது அல்ல. ‘புராஜெக்ட் விஷ்ணு’ என்ற பெரும் தேசிய பாதுகாப்பு கனவின் ஒரு முக்கிய அங்கம். எதிர்கால ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், பிரம்மோஸ்-2, பிரம்மோஸ்-என்.ஜி போன்ற உலகத் தர ஆயுதங்களுக்கான அடித்தளமாக இந்த ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பம் அமைகிறது. ஒலியின் வேகத்தை 6 முதல் 10 மடங்கு மிஞ்சும் ஆயுதங்களை உருவாக்கும் திறன், இந்தியாவை தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளால் கூட எளிதில் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.

இத்தகைய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தடுக்க முடியாது என்பதே உலக நாடுகளை பதற வைத்த உண்மை. இந்த வெற்றியுடன், ரஷ்யா மற்றும் சீனா போன்ற சில நாடுகள் மட்டுமே இருந்த ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பக் கிளப்பில், இந்தியா தன்னம்பிக்கையுடன் இணைந்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தியா இந்த உயரத்தை எட்டியிருப்பது, மோடி ஆட்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையின் நேரடி விளைவு. இது ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்த சாதனை.

முடிவாக, இந்த 12 நிமிட வெற்றி ஒரு சோதனை அல்ல; உலகுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்தியா இனி பலவீன நாடு அல்ல, பதில் சொல்லும் வல்லரசு. வானையும் வேகத்தையும் வென்று காட்டிய இந்த ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பம், இந்திய பாதுகாப்பு வரலாற்றில் ஒரு வைர அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும்.