24 special

ரெட் ஜெயன்ட்டில் இருக்கும் வில்லங்கம்... இறங்குகிறது டெல்லி சிறப்புப்படை...

UDHAYANITHI, SAVUKKU SHANKER
UDHAYANITHI, SAVUKKU SHANKER

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் ஒரு குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சூடோபெட்ரின் என்ற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதி பொருளை வெளிநாட்டிற்கு ஒரு கும்பல் கடத்த முற்பட்டதே தடுத்த நிறுத்தி வேதிப்பொருளை கைப்பற்றியதோடு அந்த கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அதோடு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்கள் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்று தமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவரை கூறினார். இதனால் ஜாபர் சாதிக் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியதை அடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவானார். இதனை அடுத்து டெல்லி போலீஸ் சம்மன் நோட்டீசை சென்னையில் உள்ள ஜாபர் சாதி வீட்டில் ஒட்டி வீட்டிற்கு சீல் வைத்துவிட்டு சென்றது பிறகு ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகள் மூலம் அடுத்த கட்ட விசாரணையும் ஆரம்பித்தது, டெல்லி போலீஸாரால் கைப்பற்றப்பட்ட அந்த சிசிடிவியில் அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் இடம்பெற்று இருப்பதாகவும் அவர்களுக்கும் ஜாஃபர் சாதிப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்த விசாரணைகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதனால் திமுக ஜாபர் சாதிக்கு தனது கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது அதேபோன்று ஜாஃபர் சாதிக் சகோதரர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவர அவர்களின் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமை தனது கட்சியில் இருந்து நீக்கினார். இதற்கிடையில் 2013ல் மிக முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜாபர் சாதி தலைமறைவாக அந்த ஒரு வருட காலம் முழுவதும் இருந்துள்ளார், ஆனால் எப்படி திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு சுதந்திரமாக தமிழகத்திற்குள் நடமாட ஆரம்பித்தார் மேலும் அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் போன்றோரும் நெருக்கமாக இருந்துள்ளனர்!! எப்படி என்ற கேள்வியையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லி போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த விசாரணையில் ஜாபர் சாதிக் தான் போதை பொருள் கடத்தல் மூலம் பெற்ற வருமானத்தை சினிமா துறையிலும் ரியல் எஸ்டேட் துறையிலும் செலவழித்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  அதோடு அவருக்கும் பல அரசியல் பிரமுகர்களுக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாகவும் என் சி பி அதிகாரி பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு போதை பொருள் விளக்கமும் கஞ்சா புழக்கமும் அதிகரித்து விட்டதாகவே பேசப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திமுக நிர்வாகி போதை கடத்தல் கும்பலின் தலைவனாக இருந்து வந்துள்ள செய்தியும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக அவருக்கும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியது வேறு தமிழகத்தில் ஆளும் அரசுக்கு இடியை இறக்கி உள்ளது.  ,இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தபொழுது ஜாபர் சாதிக் போதை கடத்தல் மூலம் ஈட்டிய வருமானத்தை சினிமா துறையில் செலவழித்துள்ளதாக கூறினான் அதோடு அந்த சினிமாத்துறை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆக இருக்கும் என்று எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற வகையில் கூறியுள்ளார் இது தற்போது இணையத்தில் வைரலாக உலா வருகிறது. அது மட்டுமில்லாமல் இதற்க்கு விசாரிக்க சிறப்புப்படை ஒன்று டெல்லியில் இருந்த வருகிறது எனவும் வேறு அரசியல் விமரிசகர்கள் கூறுகின்றனர்...