Tamilnadu

மீண்டும் KT ராகவனுக்கு பொறுப்பு வழங்கினால் என்ன நடக்கும் அண்ணாமலைக்கு ஸ்ரீராம் சேஷாத்திரி விவரிப்பு

Sriram seshathiri
Sriram seshathiri

அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி KT ராகவனுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு வழங்கினால் அது எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார் அது பின்வருமாறு :- 


2002 ஆம் ஆண்டு திரு அத்வானி அவர்கள் சென்னையில் பாஜக நிர்வாகிகளிடம் உரையாடும்போது, பாஜக மற்ற கட்சிகளிடம் இருந்து மாறுபட்டு உள்ளது, பாஜகவினர் போடும் வெள்ளை உடை போல மக்கள் அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கிறார்கள், அதனால் பாஜகவினர் மிக ஜாகிரதையாக இருக்க வேண்டும், மற்ற கட்சியில் சாதாரணமாக நிகழ கூடிய தவறுகள்,

பாஜகவில் ஏற்பட்டால், அதனை மக்களும், எதிர் கட்சிகளும், ஊடகங்களும் பெரிதாக்கி  விமர்சிக்கும். அவர்களை குறை கூற முடியாது, நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

திரு அத்வானி அவர்களை ஹவாலா டைரியில் அவர் பெயர் உள்ளது என்று ஊடகங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி குறை சொன்னபோது, அவர் கட்சியில் இருந்து விலகி, தான் நேர்மையானவன் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து, பின்பு கட்சியில் சேர்ந்தார்.

அதேபோல பங்காரு லக்ஷ்மன் பணம் பெறுவதை வீடியோ ஆதாரம் இருந்ததால், அவரை பதிவியில் இருந்து இறக்கியது. இப்போது, தமிழ்நாட்டில் KTR  மீது வந்த பாலியல் விடீயோவினால், அவர் தன பொறுப்பை ராஜினாமா செய்து, பாஜக மற்ற கட்சியில் இருந்து வேறுபட்டது என்பதை நிரூபித்து உள்ளது.

ஆனால் தற்போது வரும் வதந்திகள் கவலை அளிப்பதாக உள்ளது. அவர் தன மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபித்தால், அவர் மறுபடியும் அதே பொறுப்பில் வருவது தவறில்லை, அனால் அதற்க்கு முன், அவரை கட்சியில் இருந்த பொறுப்பிற்கு மறுபடியும் கொண்டுவரவேண்டும் என்று நிர்பந்தித்தால், அது தமிழக பாஜகவினருக்கு, நிமிர முடியாத தலை குனிவாகவே இருக்கும். 

திரு அண்ணாமலை கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கும், சித்தாந்தத்துக்கும் மாற்று பாஜக மட்டுமே என்று நடவடிக்கை எடுத்து பலதரப்பட்ட மக்களின் ஆதரவை பெற்று வருகிறார், அதனை நலிவடைய செய்யும் முயற்சியாக, அவரை மத்தியில் இருந்து நிர்ப்பதிந்தால், அவருக்கு 2 வழிகள் மட்டுமே இருக்கும். ஒன்று மத்திய தலைமையின் அழுத்தத்துக்கு பணிந்து தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்திய அளவிலும் பாஜகவின் மாட்சிமையை குறைத்து பொறுப்பில் இருப்பது, அல்லது அழுத்தத்தை எதிர்த்து போராடி, இயலவில்லை என்றால் தன பொறுப்பை துறப்பது. இரண்டுமே, பாஜகவுக்கு நல்லது அல்ல. 

நான் கேள்விப்பட்ட வதந்தி வதந்தியாக இருப்பதே நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறன். தமிழகத்தில், பாஜக உறுப்பினர் அல்லாத பலர் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது, ஒரு நம்பிக்கையின் ஆதாரத்தில், அந்த நம்பிக்கையையே இழக்கும் வண்ணம்  பாஜகவின் முடிவுகள் இருக்காது என்று நம்புவோம் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.