24 special

கொல்லிமலை காட்டில் அதிசயமும், மர்மமும் நிறைந்த சிவன் கோவில்!!

SHIVAN TEMPLE , KOLLIMALAI
SHIVAN TEMPLE , KOLLIMALAI

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் சிறப்பு வாய்ந்த ஒரு சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலினை கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில் என்றும் கூறுவார்கள். பொதுவாக கொல்லிமலை என்றாலே பல அதிசயங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கிய இடம் என்று அனைவருக்கும் தெரிந்தது. அப்படிப்பட்ட மர்மங்கள் பல நிறைந்த மலையில் அனைவரும் அறிந்திடாத ஒரு சிறப்பு வாய்ந்த சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்றும் மிகவும் சக்தி வாய்ந்த சிவன் இங்கு அமைந்திருக்கிறார் என்றும் பக்தர்கள் பலர் கூறி வருகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் அதிசயமாக குறி சொல்லும் கல் ஒன்று அமைந்திருக்கிறது என்றும் கூறுகின்றனர். அந்த கல் ஆனது அடிக்கல் மற்றும் மேல் கல் என்று இரண்டு பாகங்களாக அமைந்திருக்கும் என்று கூறுகின்றனர். முதலில் அந்த மர்மக்கல்லின் மீது நமது வலது கையினை அழுத்தம் இல்லாமல் வைத்து அதன் பிறகு இடது கையினை வலது கையின் மீது வைத்து ஏதேனும் ஒரு காரியத்தை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும்.


அவ்வாறு கையினை வைத்து வேண்டிக் கொள்ளும் சிறிது நேரத்திலேயே அந்த கல் கொஞ்சம் அசைவு ஏற்பட்டு நகருமாம்!! அப்படி நகர்ந்தால் நாம் மனதில் நினைத்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர்!!மேலும் இந்த கோவிலில்  சமைத்து வைத்த மீன்களுக்கு சிவபெருமானின் அருளால்  மீண்டும் உயிர் வந்து ஆற்றில் குதித்து உயிருடன் சென்றன என்ன வரலாறு இருப்பதால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆற்றில் உள்ள மீன்களுக்கு உணவளித்துவிட்டு தான் கோவிலுக்குள் சிவனை தரிசனம் செய்வதற்காக செல்கின்றனர். இந்த நிலையில் அதே கொல்லிமலையில் தற்போது ஒரு மர்மமான முறையில் மறைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பழமையான சிவன் கோவிலானது கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை சரியாக பராமரிக்காமல் மண்ணுக்குள் சிவன் பாதி மூழ்கி போய் இருப்பது போலவும், கோவில் இடிந்த நிலையிலும் காணப்பட்டு வருகிறது. இப்படி கொல்லிமலையின் காட்டுக்குள் அதிகம் அறியப்படாத சிவன் கோவில் ஒன்று இருப்பதை கேட்கும்பொழுது மிகவும் வியப்பாகவே உள்ளது. ஆனால் இந்த கோவிலின் வரலாறும் பெயரும் இந்த ஊரில் வாழும் மக்களுக்கே சரியாகத் தெரியாமல் இந்தக் கோவிலை சிவன் ஆண்டி கோவில் என்று கூறி வருகின்றனர். எனவே இந்த கோவில் நிச்சயமாக சித்தர் ஒருவர் உருவாக்கிய கோவிலாகவே இருக்கும் என்று அறியப்படுகிறது. 

கோவிலின் நடுவில் ஒரு பெரிய மரமும் ஒன்று வேரூன்றி காணப்படுவதை பார்க்க முடியும். மேலும் இரண்டு நுழைவாயில்களைக் கடந்து கருவறைக்குள் அமைந்திருக்கும் சிவபெருமானை  சென்று பார்க்க முடியும். ஆனால் தற்போது இந்த கோவில் இருக்கும் நிலைமையை பார்த்தால் கருவறை வரை சென்று சிவபெருமானை தரிசிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகவே இருந்து வருகிறது. மேலும் முழுமையாக கல்லினால் கட்டப்பட்ட இந்த கோவிலில் பல தமிழ் கல்வெட்டுகளும் காணப்பட்டு வருகிறது. மேலும் இங்கு அமைந்திருக்கும் சிவனுக்கு கோபுரமோ அல்லது விமானமோ எதுவுமே இல்லாமல் முழுவதும் இடிந்த நிலையிலேயே காணப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் முழுவதும் மரங்களும் அதனுடைய வேர்களும் பரவி இருப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய பழமை வாய்ந்த கோவில் செம்மேடு  ஊரிலிருந்து போட்டிங் ஹவுஸ் செல்லும் வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது. கொல்லிமலையில் அமைந்திருக்கும் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றானது அறப்பல்லீஸ்வரர் திருக்கோவிலாகும். அதே போல தான் இந்த கோவிலும் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகத்தான் இருக்கும் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.