Tamilnadu

"லாவண்யா" விவகாரம் வெளுத்து எடுத்த சணம் ஷெட்டி!!

lavanya and sanam shetty
lavanya and sanam shetty

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது, தமிழகத்தை கடந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன, தமிழக பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,  இந்த சூழலில் தற்போது தேசிய குழந்தைகள் ஆணையம் தற்போது தமிழக டிஜிபி க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


லாவண்யாவிற்கு நீதிகேட்டு நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டம் என இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் இந்த சூழலில் லாவண்யாவின் வீடியோவை பகிர்ந்த நடிகை சனம் ஷெட்டி தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :- மத மாஃபியாவால் ஒரு அப்பாவி பெண்ணை இழந்த நாம் எப்படி #பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவது?

#JusticeForLavanya ஏன் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இல்லை? ஒரு முழு மதத்தையும் நியாயமற்ற முறையில் தாக்குவதை விட உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.#SpeakForLavanya #conversionscams என குறிப்பிட்டுள்ளார். தற்போது பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தஞ்சை மாணவி விவாகரத்தில் நீதி கேட்டு போராடுப்பவர்களை தவறாக சித்தரிப்பது குறித்து எழுத்தாளர் சுந்தரராஜ சோழன் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :- லாவண்யா விவகாரத்தில் கிருஸ்தவத்தின் மீது வெறுப்பை பரப்புவதாக சொல்கிறார்கள்..இது ஒரு அபத்தமான, அபாண்டமான குற்றச்சாட்டு.

உண்மையில் இந்து வெறுப்பை பேசுபவர்களோடு தங்கள் மேடையை பாதிரியார்கள் பகிர்ந்து கொள்வதுதான் வழி வழியாக நடக்கிறதே ஒழிய,கிருஸ்த்தவ மதத்தை இழிவு செய்து எந்த இந்துக்களும் கூட்டம் போடவில்லை, அவரவர் அடையாளத்தோடு தங்கள் வாழ்வை தொடர வேண்டும்.

மூளைச்சலவை மூலம் கட்டாய மதமாற்றம் செய்வதை அரசியல் நோக்கமாக வைத்திருப்பதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.அன்று கிழக்கிந்திய கம்பெனி பொருள் வணிகத்தின் வழி இந்தியாவை பிடித்தது போல இன்று அருள் வணிகத்தின் மூலம் பிடிக்க நினைப்பதை பார்த்துக் கொண்டிருந்தால் நாம் மீண்டும் அடிமையாவோம் என வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

லாவண்யா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது விரைவில் உண்மையான குற்றவாளிகளை அண்ணா அரசு கைது செய்யவேண்டிய சூழல் உண்டாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.