24 special

ஏமாத்திட்டா ஓடுற... காதலனை தெறிக்கவிட்ட பெண் செய்த வைரல் சம்பவம்....

mrg issue
mrg issue

காதல் மதம் பார்ப்பதில்லை இனம் பார்ப்பதில்லை காதலுக்கு கண் கிடையாது காதலுக்கு பணம் தேவையில்லை என்று பல திரைப்படங்களில் காதல் வசனங்களை கேட்டு இருப்போம்! ஆனால் அவை அனைத்தும் நிஜத்தில் கடைபிடிக்கப்படுகிறதா என்று கேட்டால் மிகவும் யோசிக்க கூடிய ஒன்று! வேறு சாதியை சேர்ந்தவர்களுக்கிடையே காதல் வந்தால் அதை வேரோடு அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்! அதே நேரத்தில் தன் பிள்ளைகளின் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக நினைத்து மதத்தையும் இனத்தையும் பார்க்காமல் காதலர்களை சேர்த்து வைக்கிறார்கள் சில பெற்றோர்கள்! ஆனால் பல பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளை வேறு ஒரு சாதியை சேர்ந்தவரை காதலிக்கிறது பட்டியலின பெண்ணை காதலிக்கிறது என்று தெரிந்தால் அவர்களின் மனதை மாற்ற நேசிக்கிறார்கள் அதோடு அதை மீறி திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய பிள்ளை என்று கூட பார்க்காமல் கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள் இதைத்தான் ஆணவக் கொலை என்று கூறுவார்கள் இப்படிப்பட்ட ஆணவக் கொலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவில் நடைபெற்றது அது குறித்த பரபரப்பான செய்திகளும் வெளியானது. 


அதுமட்டுமின்றி இவற்றை குறித்த பல படங்களும் தமிழ் சினிமாவை வெளியானது, திரைப்படங்களில் அவற்றை பார்க்கும் பொழுதே நம் மனம் அனைத்தும் பதை பதைக்கும் இப்படி ஒரு இன வெறியா ஜாதி வெறியா என்று பலர் தங்களது ஆத்திரங்களை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் நிஜ வாழ்வில் பெரும்பாலானோர் இந்த சமூகம் என்ன பேசுமோ நம்மை சுற்றும் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசுவார்களோ உறவினர்கள் என்ன நினைப்பார்களோ என்று சிந்தித்து தங்கள் பிள்ளைகளின் ஆசைகளை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கிறார்கள். இந்த விவகாரங்களில் தன் பெற்றோரின் பேச்சுக்கு இணங்கி தன் காதலனையோ காதலையையோ கைவிடுபவர்கள் சமூகப் புறக்கணிப்பிற்கும் நிற்கதியாகவும் விடப்படுகிறார்கள்! 

அப்படிப்பட்ட ஒரு சம்பவமே தற்போது நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டம் நந்தம்பட்டி அருகே உள்ள தனியார் கார் ஷோரூமமில் 25 வயது சேர்ந்த மனோஜ் பிரதாப் வேலை செய்து வந்துள்ளார், இதே தனியார் நிறுவனத்தில் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பொன்னரசியும் வேலை பார்த்து வந்துள்ளார் இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால் நட்பாக பேசியுள்ளனர் பிறகு காதலில் விழுந்து காதலித்தும் வந்துள்ளனர்! இதனை அடுத்து தங்களது நண்பர்களின் உதவியுடன் நாமக்கல்லில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த செய்தி முதலில் பொன்னரசியின் வீட்டிற்கு தெரிய வர, இவர்களின் திருமணத்தை பொன்னரிசியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் பட்டியலின பெண்ணான தன் பெண் வேறு ஜாதியினருடன் திருமணம் செய்து கொண்டது குறித்த விவகாரம் பெருமளவில் வெடிக்கலாம் என்பதை தெரிந்தும் அவர்கள் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஒதுங்கதாகவும் கூறப்படுகிறது, அதேபோன்று பொன்னரசியின் கணவரான மனோஜ் பிரதாபின் பெற்றோர்களும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பொன்னரசியை விட்டுவிட்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனால் மனோஜ் பிரதாப் தமிழரசியை விட்டுவிட்டு பெற்றோர்களிடம் சேர்ந்துள்ளார் இது குறித்து பொன்னரசி தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து தாரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் ஓமந்தூர் அனைத்து மக்களுக்காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் அங்கு இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் மனமுடைந்த பொன்னரசி தன் கணவரான மனோஜ் பிரதாபின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார், பொன்னரசி வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மனோஜ் பிரதாபின் குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.  இருப்பினும் பொன்னரசி இரவு முழுவதும் மனோஜ் பிரதாப் வீட்டின் முன்பே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் அதற்கு பிறகு சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரி சசிகலா சம்பவ இடத்திற்கு விரைந்து பொன்னரசியிடம் மனோஜ் பிரதாப்பை கண்டுபிடித்து சேர்த்து வைப்பதாக கூறி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்! நாடும் எவ்வளவோ முன்னேறி விட்டது அதற்கு ஏற்ற வகையில் பலரும் மாறி வருகிறார்கள் ஆனால் இந்த ஜாதி வன்கொடுமையும் ஜாதியை போற்றும் சில மனிதனின் மனம் மட்டும் மாறாமல் உள்ளது!