ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனில் இருந்து தற்போது பிரதமராக அமர்ந்து இந்திய நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் பிரதமர் நரேந்திர மோடி! இவர் தொடங்கிய பல திட்டங்கள் பல மக்களிடம் அவரை கொண்டு போய் சேர்த்துள்ளது மேலும் மக்களுக்கு வேண்டிய அன்றாட மற்றும் அடிப்படைத் தேவைகளையும் தனது திட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார் இதன் காரணமாகவே கடந்த இரண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று உள்ளார். தன்னையும் தன் மொத்த உழைப்பையும் நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிட்டு வரும் பிரதமர் தனக்காக சிறிது நேரம் ஒதுக்குகிறார் என்றால் அந்த நேரம் முழுவதும் ஆன்மீகத்திலேயே தன்னை ஈடுபடுத்தி இருப்பார். இதனை அவர் மேற்கொண்ட பல பயணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவின் பொழுது பிரதிஷ்டை பிரதமரின் கையால் மேற்கொள்ளப்பட்டது.
அதற்காக தன்னை முழுமையாக தயார்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து செயல்களையும் மேற்கொண்டார் மேலும் கும்பாபிஷேக தினத்தின் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகம் வருகை புரிந்து திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை புரிந்ததோடு ராமேஸ்வரத்திலும் புனித நீராடி தனுஷ்கோடிக்கு சென்று சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பலமுறை தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார் ஆனால் அன்று எல்லாம் பிரதமருக்கு கொடுக்கப்படாத பாதுகாப்பு இன்று கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானம் செய்ய உள்ளதாக தமிழகம் வருகை தருகின்ற பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் பிரதமர் இதற்கு முன்பாக அதிக முறை தமிழகத்திற்கு வந்துள்ளார் கன்னியாகுமரிக்கும் வந்துள்ளார் அப்படி இருக்கும் பொழுது இந்த முறை மட்டும் ஏன் பிரதமரின் வருகைக்கு இத்தனை பாதுகாப்புகள் இத்தனை தீவிர கண்காணிப்புகள் இன்று கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அதாவது தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகலில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து விமானத்தில் மாலை 4 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடையும் பிரதமர் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகில் சென்று விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி அன்று இரவு அங்கே தங்க உள்ளார். மேலும் (நாளை) மே 31, மற்றும் 1 ஆகிய இரண்டு தினங்கள் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதனால் விவேகானந்தர் பாறை மட்டுமின்றி கன்னியாகுமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பில் உள்ளது. மேலும் வியாழன் முதல் சனிக்கிழமை வரை சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் தனியார் படகுகளுக்கும் கடலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் ஒட்டுமொத்த கடலையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது இந்தியாவை பொறுத்தவரையில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடம் தான் கன்னியாகுமரி, மேலும் பிரதமர் கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லை பகுதியில் 3 நாட்கள் தங்க உள்ளார். அதிலும் குறிப்பாக கடலோரம் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் பகுதி கூட! தற்போது இலங்கையிலும் சீனாவின் ஆதிக்கம் இருப்பதால் இந்த தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தபடுவதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னை என் ஐ ஏ அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி கொலை மிரட்டல் வந்த காரணத்தினால் தற்போது பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.