Politics

இந்தியா ரெடி நாள் குறிச்சாச்சு! அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடி உத்தரவு! பாக்கிற்கு பயத்தை உண்டாக்கிய போர் செய்தி!

pmmodi
pmmodi

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என்பது உறுதியாகிவிட்டது. பயங்கரவாதத்தை தனது சொந்த மண்ணில் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்துமாறு இந்தியா விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகும் மும்பை தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி ஹஃபீஸ் சையது உள்ளிட்டோருக்கு வழங்கும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். அதற்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை பிடிக்க தொடா்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


இதற்கிடையே  நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது தீவிரவாத தாக்குதலை கண்டித்து இந்தியா பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு செக் வைத்துள்ளது.மேலும் போர் குறித்து  பிரதமர் மோடி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி ஏபி சிங் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது விமானம் மற்றும் கடற்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தளபதிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்திய ராணுவத்தின் தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளும்படி மாநில தலைமைச் செயலாளர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்போது, வான்வெளி தாக்குதல் முன்னெச்சரிக்கை கருவிகளின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுதல் கட்டுப்பாட்டு அறைகள், நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகளை சோதித்து அறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், அணுஉலை மற்றும் ஈனுலை மையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்கள் அந்நிய படைகளின் இலக்காகலாம் என்பதால் அவை அந்நிய ராடாரில் இருந்து தெரியாமல் தடுக்க தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மறைத்தல்; தாக்குதல் நடப்பதாகவோ தாக்குதல் நடந்தாலோ அங்குள்ளவா்களை பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்தல்; மக்களை பத்திரமான இடத்துக்கு அழைத்துச்செல்லுதல், அதற்கு தேவையான தளவாட வசதிகள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்டவற்றை தயாா்நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை பாதுகாப்பு ஒத்திகையின் அங்கமாக செயல்படுத்துமாறு மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (பிஓகே) எல்லை கிராமங்களில் இருப்பதாக கருதப்படும் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களில் இந்தியா எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வார இறுதியில் இந்தியா பாகிஸ்தானை பொழைக்க ஆரம்பிக்கும் என செய்திகள் வருகிறது. மேலும் இந்தியாவில் இருந்துகொண்டு மத ரீதியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து வருபவர்களை களையெடுக்கவும்மத்திய அரசு முடிவு செய்துள்ளது.குறிப்பாக மேற்குவங்கம் தமிழகம்,கேரளா,தெலுங்கானா,  இந்த நான்கு மாநிலங்களை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க உள்ளது இது குறித்து ஆலோசனைகள் செய்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம்!