Politics

அடி மேல் அடி.. வெறும் 96 மணி நேரம் தான்! வெளியே சொல்லமுடியாமல் கதறும் பாக்... கண்ணையே நோண்டி எடுக்க இந்தியா முடிவு!

pm modi
pm modi

பாகிஸ்தானிடம் இருந்த பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா – உக்ரைன் போரின் போது உக்ரைன் நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க கூட சரியான ஆயுதங்கள் இல்லை…பாகிஸ்தானிடம் இருந்த பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா – உக்ரைன் போரின் போது உக்ரைன் நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க கூட சரியான ஆயுதங்கள் இல்லை என்றும் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் கூறப்பட்டிருப்பதாக செய்தி கசிந்துள்ளது


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.இந்தியா இது பாகிஸ்தான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த அதிரடியாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பான் பகுதியில் உள்ள பக்லிஹார் அணை மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள கிஷன்கங்கா அணை மூலமாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.பக்லிஹார் அணையின் நீர் வெளியேறும் வாயில்களின் கதவுகள் மூடப்பட்டு, பஞ்சாப் மாகாணம் நோக்கி செல்லும் நீர் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையாகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் தலைமையில் கூட்டங்கள்  நடைபெற்றது. விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்துள்ளார். இதற்கு முன்பு நேற்று கடற்படை தலைவர் தினேஷ் திரிபாடி, அரபிக்கடல் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமரை சந்தித்திருந்தார். அடுத்தடுத்து விமானப்படை, கடற்படை தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பதால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தற்ப்போது பொருளாதாரத்தால் பின் தங்கியுள்ளது. அடுத்த நாடுகளிடம் கையேந்தி வருகிறது. மேலும் ராணுவத்தின் பலமும் குறைந்துகொண்டே வருகிறது. தீவிரவாதிகளை வைத்து பிழைப்பை நடத்தி வரும் பாகிஸ்தான் பணத்திற்காக தன்னிடம் இருந்த இராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்றுள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகி உள்ளது, போர் ஆரம்பமாகும் பட்சத்தில் பாகிஸ்தான் எவ்வளவு நாட்களாக தாக்குபிடிக்கும் என்பது சந்தேகம்.

பாகிஸ்தான் அதனுடைய படைகள் மற்றும் ஆயுதங்கள் பற்றி பெரிதும் புகழ்ந்து, இந்தியாவுக்கு எதிராக பதிலடி கொடுப்போம் என வாய்ச்சவடால் விடுகிறது. ஆனால் உண்மை நிலை வேறுவகையில் உள்ளது. பாகிஸ்தான் தங்களது ஆயுதங்கள், ஸ்கெலிட்டன் ஆயுதங்கள் மற்றும் ராக்கெட் குண்டுகள் முதலியவற்றை  அதிகளவில் உக்ரைனுக்கு விற்றுள்ளது, இதனால் அவர்களின் ஆயுத இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் எதிர்த்து தாக்குவதற்கும் தங்கள் நாட்டை காப்பதற்கும் கூட பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது 

மே 2ஆம் தேதி பாகிஸ்தானின் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஆயுதங்கள் குறித்து விவாதிக்கபட்டுளது அதில்  எம்109 ஹவிட்சர் துப்பாக்கிகளுக்கான 155 மில்லிமீட்டர் குண்டுகள் மற்றும் பிஎம்-21 ராக்கெட்டுகள்மொத்தமாக காலியாகிவிட்டது ஆயுதக்கிடங்குகளில் ஆயுதங்கள் இல்லை என புலம்பி உள்ளார்கள் பாகிஸ்தான் இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள் வெறும் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது இந்தியா போர் தொடுத்தால் 96 மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளார்கள். மேலும் ராணுவ வீரர்களும் கொத்து கொத்தாக பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகி வருகிறார்கள். 

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிலைத்தன்மையின்மையை எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாத ஆதரவினால், அதன் பொருளாதாரம் மிகவும் திணறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் நிலைகுலைந்துவிடும் என்று தான் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.