24 special

எடப்பாடி முகத்தில் மக்கள் கரியை பூசுவார்கள்... கொந்தளித்த ஜெயபிரதீப்..!

OPS, EPS
OPS, EPS

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கிறார், அவர் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஓபிஎஸ் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது என்பது அரசியலில் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியியல் பாஜக தலைமையிலான கூட்டணியின் சார்பாக சுயேட்ச்சையாக களமிறங்குகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விவசாயம் சின்னம் தொடர்பாக கேட்டு வரும் அவர், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்க்கு போட்டியாக திமுக சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைவர் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயப்பெருமாள் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கிய ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை கொண்டு அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வரான பன்னீர் செல்வம் தனது பக்கம் உள்ள ஆதரவாளர்களை கொண்டு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். தான் தன் அதிமுகவின் தொண்டன் என்று கூறி வரும் பன்னீர் செல்வம் இத்தேர்தலில் தனி சின்னத்தில் தனது ஆதரவை காட்ட போராடி வருகிறார். கடந்த தினங்களுக்கு முன்பாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து மற்றுமொருவர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். 

அதே நாளில் மீண்டும் ஒருவர் ஓபிஎஸ் பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று மட்டுமே இருவர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் வரை இருப்பதால், இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ என்று கலக்கத்தில் உள்ளனர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த போது அவருக்கு அங்கு பாஜகவினர் மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்களே உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மேலும், சொந்த தொகுதியான தேனியியல் பாஜக கூட்டணி சார்பாக களமிறங்கும் தினகரனுக்கும் ஓபிஎஸ் தனது முழு செல்வாக்கை கொடுத்து வருகிறாரம். இப்படி இருக்கையில் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் எதிராக 5 பேர் அதே பெயரை கொன்டு போட்டியிடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த தேர்தலில் வெற்றிக்கனியை சூடும் ஓபிஎஸ்க்கு பெற்று தருவோம். அதனை கேள்விப்பட்ட சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது. அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்? அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா? என்று ஜெயப்ரதீப் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.