24 special

பம்பரம் சின்னம் கிடையாது.. துரை வைகோவுக்கு அடுத்தடுத்து சிக்கல்..!

Vaiko, Durai vaiko
Vaiko, Durai vaiko

நாடாளுமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சி தொடங்கி அனைத்து கட்சிகளுக்கு தனக்கு சொந்தமான சின்னத்தை மீண்டும் பெரும் முயற்சியில் தேர்தல் ஆணையத்தை அணுகி வந்தது. இதில் தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக வைகோவை கைவிட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.


வரவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக குறைந்தபட்சம் இரண்டு தொகுதி ஒதுக்குமாறு கேட்டு வந்தது. திமுக அதற்கு உடன்படாமல் கடைசியில் ஒரு தொகுதிக்கு கையெழுத்தானது. அதிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வைகோ கடைசி வரை சொந்த சின்னம் தான் என்று கூறினார். ஆனால், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்காமல் இருக்க, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சி தேர்தலில் குறைந்தது இரண்டு இடத்தில போட்டியிடவேன்டும் என்றும் இதனால் சின்னம் கிடைக்காது என்பது போல் வாதிட்டார்.

மேலும், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலும் இல்லை என்று நேற்று தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தது. இன்று பமபரம் சின்னம் மதிமுகாவுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுத்துள்ளது. இதனால் மதிமுகாவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியும் வைகோவின் மகன் துறை வைகோ போட்டியிடுகிறார். அவர் திமுகவினர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட சாகும் வரை சொந்த சின்னம் தான் என வசனம் எல்லாம் பேசினார் இதுவே திமுகவினரிடன் கோவத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவர் அப்படி பேசியதால் தஹ்ரபோது அவரது பிரச்சாரத்திற்கு கூட அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் கேஎன் நேரு கலந்து கொள்ளவிலை தனித்து விடப்படாததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சின்னம் இல்லாதது திருச்சியில் வெற்றிபெறுவது என்பது கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவிடம் இரண்டு தொகுதிகள் கேட்டும் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் தான் தற்போது சின்னம் கிடைக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்து திமுக பழிவாங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது. மதிமுக பம்பரம் சின்னம் இல்லையென்றாலும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட  முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. துரை வைகோ மீண்டும் மேல் முறையீடு செய்வதாக கூறுகிறார். தனி சின்னத்திலும் நிற்க தயார் என்று மதிமுக முன்வந்துள்ளது. இன்றுடன் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.