24 special

தமிழ் படிக்க தெரியாத நாம் தமிழர் வேட்பாளர்..!

Koushik, Seeman
Koushik, Seeman

நாடளுமன்ற தேர்தலுக்காக பிராந்திய கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ந்து தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த  தினங்களுக்கு முன் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். அதனை தொடர்ந்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.  நேற்று நாம் தமிழர் கட்சி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது தமிழ் தெரியாது என்று சொல்ல பின்பு மாவட்ட ஆட்சியர் படிக்க பின் தொடர்ந்தார்.


தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் தனித்து நிற்கும் சீமான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை தனித்து நிற்கிறேன் என்று அறிவித்தார். அதற்கு முன்பாக அதிமுக கட்சியில் இருந்து சீமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும் தனித்து போட்டி போடுவேன் கூட்டணி என்பது கிடையாது என்று கூறினார். 2024 நாடளுமன்ற தேர்தலில் நாதக கணிசமான வாக்குகளை பெற்று பெரிய கட்சியாக அவதாரம் எடுப்பார் அவருக்கு பின்னால் தம்பிகள் பலர் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அப்படியே அது மாறிவிட்டது.

தேர்தலுக்காக அனைத்து சிறிய கட்சிகள் என அனைவரும் தனது சின்னத்தை தேர்தல் அலுவலகத்தில் கோரி பெற்று வந்தனர். ஆனால், சீமான் சின்னம் வேண்டி கோரவில்லை இதனால் அவரது சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு கொடுக்கப்பட்டது. தற்போது பல சிக்கலுக்கு பிறகு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை வழங்கியது. இந்த சூழ்நிலையில் மைக் சின்னம் வேண்டாம் விவசாயம் சார்ந்த சின்னத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையில் வேட்பாளர் ஒருவர் தமிழ் தெரியாது என்று கூறியது சீமானுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் அடி வருகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கௌசிக் என்பவர்  நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல்  செய்தார் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழிப் படிவம் வழங்க அதை வாசிக்குமாறு கூறினார். அப்போது, தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்று கூறினார். அதையடுத்து, உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் படிக்க பின் தொடர்ந்து அந்த வேட்பாளர் படித்தார். இது இணையத்தில் வைரலாக சீமான் மீது விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா என கட்சியினரிடம் கேட்டபோது, மருத்துவர் கவுசிக்கின் பெற்றோர் வட மாநிலத்தில் வசிக்கின்றனர். கவுசிக் அங்கு படித்ததால் அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. பேச மட்டுமே தெரியும், என்று கூறினர். இப்படி இருப்பவருக்கு சீமான் சீட் கொடுத்தது இல்லாமல் என்னால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்றும் தமிழ் மொழியை பாதுகாப்பேன் என்றும் மேடைக்கு மேடை பேசுவதெல்லாம் வீண் பேச்சா என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.