24 special

இந்த கோவிலுக்கு உங்க குழந்தையை அழைச்சுட்டு போங்க.. அப்புறம் பாருங்க....

SHIVAN TEMPLE
SHIVAN TEMPLE

திருநெல்வாயில் சிவபுரி என்னும் ஊரில் அமைந்துள்ள உச்சிநாதர் என்ற மதியனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. குச்சிநாதர் சம்பந்தருக்கு சம்பந்தப்பட்டவர் ஆவார். இந்தக் கோவிலில் மூலவராக உச்சி நாதரும், அம்மன் கனகாம்பிகையும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இந்தக் கோவிலில் சிவன் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கின்றார். சிவனின் தேவார பாடல் பெற்ற தலங்களில் 274 சிவாலயங்களில் இந்தக் கோவில் மூன்றாவது தளமாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் தான் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி அளித்தாராம்!! மேலும் சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலத்தில் தினந்தோறும் தவறாமல் இந்த கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தான் செல்வாராம்!! மேலும் சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இந்த தளத்தில் தான் இறைவன் உணவு கொடுத்தாராம்!!


இதுபோல பல வரலாற்று உண்மைகள் இங்கு நடந்திருக்கிறது என்று நினைக்கும் போது நாமும் இந்த தளத்திற்கு சென்று வழிபட வேண்டும் என்று அனைவரும் எண்ணம் கொள்கின்றனர்!! மேலும் சிறப்பாக வேறு எந்த கோவிலிலும் இல்லாதது போல் இந்த கோவிலில் ஒரு அதிசயம் உள்ளது!! அது என்னவென்றால் இந்த கோவிலில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திற்கு பின்னே சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்!! இவ்வாறு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் தளங்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளது!! எனவே திருமணம் நடக்காமல் தட்டி போகும் நபர்கள் இந்த கோவிலுக்கு சென்று திருமண கோலத்தில் உள்ள சிவனையும் பார்வதியும் வழிபட்டு வந்தால் அவர்களின் திருமண தடைகள் நீங்கி அவர்களின் மனதிற்கு பிடித்தது போல் வரம் அமையும். மேலும் கூடிய விரைவில் அவர்களுக்கு திருமணமும் நடக்கும் என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்!! இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் நம் தமிழ்நாட்டில் கடலூரில் அமைந்திருப்பது நமக்கு கிடைத்த ஒரு பெரிய வரம் தான்!!

எனது சிறுவயதில் ஒருமுறை திருஞானசம்பந்தர் பசி ஏற்பட்ட போது அம்மா! அப்பா! என்று அழுதாராம்! அழுகுரல் கேட்ட சிவனோ பார்வதியிடம் அவரின் பசியை போக்குமாறு கூறினாராம். இதன்படி ஞானசம்பந்தர் அவரின் பசியை போக்கிக் கொண்டாராம். இவ்வாறு சிறு வயதில் திருஞானசம்பந்தருக்கு ஏற்பட்ட பசியினை போக்கிய தளம் இது என்பதால் இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள்  அவர்கள் வாழ்வில் சாப்பாடுக்காக கஷ்டப்படும் நிலை எப்போதும் வருவதே கிடையாது என்று அந்தக் கோவிலை சுற்றி உள்ள மக்களும் தினசரி வந்து செல்லும் பக்தர்களும் கூறுகின்றனர். மேலும் சிறிய குழந்தைகளுக்கு முதன்முறையாக உணவு ஊட்டி விடும் போது இந்த கோவிலுக்கு வந்து முதலில் உணவு கொடுப்பது மிகவும் சிறப்பாகும்!! 

இப்படி அவர்கள் இந்தக் கோவிலில் வந்து முதன்முறையாக குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விடுவதால், அந்த குழந்தையின் வாழ்வில் எந்த நிலையிலும் உணவிற்கான பிரச்சனை எப்போதும் வராது என்று அனைவராலும் நம்பப்படுகிறது!! இவ்வாறு பல அதிசயங்கள் இந்த கோவிலில் நடந்து வருவதால் பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று இந்தக் கோவிலுக்கு சென்று அங்கேயே முதல் முறை தங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு வருகின்றனர். இந்தக் கோவிலில் வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம்  ஆகிய நாட்களில் மிகவும் சிறப்பாக பூஜைகள் நடைபெறும். மேலும் சிவன் ராத்திரி அன்று அதிக அளவு பக்தர்கள் கோடி இங்கு அமைந்துள்ள உச்சிநாதர் என்ற மதியனேஸ்வரர் வழிபட்டு தங்களை  நேத்திக்கடன்களை செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த கோவிலுக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றால் ஆரோக்கிய குறைபாடு வராது என்றும், நன்றாக குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்றும் ஒரு ஐதீகம்...