24 special

ஜாஃபரின் கூட்டாளியை கைது செய்த என்சிபி! இனிதான் ஆட்டமே இருக்கு...

JAFFER SADIQ
JAFFER SADIQ

தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய போதை பொருட்களின் கடத்தல் விவகாரத்தில் தலைவனாக தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸ் சமீபத்தில் கைது செய்தது. அதற்கு பிறகு இவரை தனது கஸ்டடியில் எடுத்து என் சி பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்ததில் அவர் பல தகவல்களை வாக்குமூலத்தின் தெரிவித்துள்ளதாகவும் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளனர். இப்படி போதை கடத்தல் மன்னனாக திகழ்ந்து வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தமிழக முழுவதும் பரவலாக பேசப்பட்டது ஏனென்றால் அவர் தமிழகத்தைச் சேர்ந்த திமுகவின் முன்னாள் நிர்வாகியும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் நெருங்கி பழகி வந்தவர் என்பதும் தமிழகம் அறிந்த ஒரு செய்தி! மேலும் ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு இனிமேல் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரம் தலை தூக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து போதை பொருள் கட்டத்தல் செய்யப்பட்டது.


இப்படி ஒரு பக்கம் போதை கடத்தல் கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்ட பிறகும் தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதும் மறுபக்கம் விசாரணையில் ஜாபர் சாதிக் கூறிய சில தகவல்களையும் அடிப்படையாக வைத்து மீண்டும் தமிழகத்தில் யாரெல்லாம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த விசாரணையையும் அவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டது என் சி பி!அந்த வகையில் தற்போது போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஜாபர் சாதிக்கிற்கு மிகவும் நெருக்கமாகவும் போதை பொருள் கடத்தலில் உதவியாகவும் இருந்து வந்த சதா என்பவரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்  சென்னையில் லாஜிஸ்டிக் நிறுவனங்களில் நடத்தி வருகிறார், அதோடு அந்த நிறுவனங்கள் மூலமே தனது போதை பொருள் கடத்தலையும் நடத்தி வந்துள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த போதைப்பொருள் கடத்தலில் சதானந்தம் ஈடுபட்டு வருவதாகவும் இந்த கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக்கின் சென்னை வட்டாரத்தில் இடது மற்றும் வலது கையாகவும் சதா செயல்பட்டுள்ளார் என்பதும் என்சிபி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது அதுமட்டுமின்றி தேங்காய் பவுடர் மற்றும் ராகி பவுடர்களுடன் போதை மருந்துகளை கலந்து சாதுர்யமாக இத்தனை ஆண்டுகளாக போதை கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்த சதாநந்தம்! 

இப்படி என்சிபி அதிகாரிகளின் விசாரணையில் சதா குறித்த பல தகவல்கள் கிடைத்ததை அடுத்து சென்னையில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரது பெயரில் சென்னையில் 3 போதை பொருள் வழக்குகளும் நிலுவையில் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.  இப்படி யாருக்கும் தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக போதை கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் ஜாபர் சாதிக்கின் வாக்குமூலத்தால் தற்போது நான்கு பேர் பிடிபட்டுள்ளனர் இருப்பினும் இன்னும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யாமல் விடமாட்டோம் என்று என் சி பி தனது விசாரணையை தீவிர படுத்தி உள்ளது. என் சி பி யின் தீவிர நடவடிக்கையால் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தை பதற்றமாக்கி உள்ளது, ஏனென்றால் ஜாபர் சாதிக்கிற்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அதிக நெருக்கம் உள்ளதும் அவர்களையும் தங்கள் விசாரணை வட்டத்திற்குள் என் சி பி கொண்டு வர உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளதால் எங்கு தனது பதவிக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டத்தில் இருந்து வருகிறது அறிவாலய அரசு!