
உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாகி உள்ளார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ... அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதற்கிடையே தான் கடந்த ஒரு வாரத்தில் டிரம்ப், பிரதமர் மோடிக்கு 4 முறை போன் போட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடி ஒருமுறை கூட எடுத்து பேசாதவில்லை. என்ற செய்தி தான் உலக தலைப்பு செய்தியாகி உள்ளது. வல்லரசு நாட்டினை டீலில் விட்டுள்ளார் பிரதமர் மோடி. இது பிரதமர் மோடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மோடி போன் எடுக்காத காரணம் என்னவென்று உலக நாடுகள் புலம்பி தள்ளி வருகிறார்களாம். தற்போது அதன் பின்னணியில் முக்கியமான காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவை எடுத்து கொண்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 5ல் ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. இப்படி இருக்கும்போது அமெரிக்காவின் 50 சதவீத வரி இந்தியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அமெரிக்காவை பிரதமர் மோடி நம்பியிருந்தார். ஆனால் டிரம்ப் வரியை போட்டு தீட்டினார். இதனால் இனியும் அமெரிக்காவை நம்பி பயனில்லை என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதோடு, டிரம்ப், அமெரிக்காவை நம்பி மீண்டும் பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று பிரமதர் மோடி நினைத்து தொலைபேசி அழைப்பை நிராகரித்துள்ளார்.
டிரம்ப் தலைக்கணத்துடன் செயல்பட்டு வருகிறார். எல்லா நாடுகளையும் வரி, வர்த்தகம் என்ற பெயரில் மிரட்டி வருகிறார். பல நாடுகளை ஒரு போன் காலில் தன்னிடம் பணிய வைத்தார். ஆனால் இந்தியாவை டிரம்பால் பணிய வைக்க முடியவில்லை. எத்தனை முறை டிரம்ப் கூறினாலும் மோடி கேட்கவில்லை.மேலும் அமெரிக்காவின் மரபணு செய்யப்பட்ட விவசாய பொருட்கள்,மற்றும் பால் வர்த்தகத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது எனதிட்டவட்டமாக கோரியுள்ளார்.
மேலும் இந்திய நலனுக்காக ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறார் மோடி . இதனால் கோபமான டிரம்ப் நம் நாட்டின் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று விமர்சனம் செய்தார். இதனை மோடியால் சகித்து கொள்ள முடியவில்லை.
அமெரிக்காவின் வரியால் நம் நாட்டில் இருந்து அங்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு சரிய உள்ளது. இதற்கு நிகரான மார்க்கெட் என்றால் அது சீனா தான். இதனால் சீனாவுடன் இந்தியா நெருக்கமாக தொடங்கி உள்ளது. இதனைதொடர்ந்து தான் பிரதமர் மோடி சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதியில் சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது டிரம்ப்புக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதனை முன்வைத்து தான் பிரதமர் மோடி, டிரம்பை மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக நியூயார்க்கின் நியூ ஸ்கூலில் செயல்பட்டு வரும் India - China institute துணை இயக்குநரும், அனலிஸ்ட்டுமான மார்க் பிரேசர் கூறுகையில், ‛‛இந்தோ - பசிபிக் பிராந்திய விவகாரங்களில் இந்தியா மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா, இந்தியாவும் நட்பாக இருந்த நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் தடுக்க முடிந்தது.இனி சீனா அங்கு ஆதிக்கம் பெறும். மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படும் நோக்கம் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. இப்போது இருவரும் கைகோர்த்துள்ளது அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.