
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுக்கு தொடர் வரிகள் விதித்து, அமெரிக்காவின் பொருளாதாரத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால், இதுவே அமெரிக்காவுக்கே பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. அந்நாட்டில் விலையேற்றம் அதிகரித்துள்ளது. இதனால் “டிரம்ப் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும்?” என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.
உலக நாடுகளும் அமெரிக்க உறவுகளை மெதுவாக துண்டித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் முதல் பிரிக்ஸ் கூட்டணிவரை, டாலரில் வர்த்தகம் செய்வதை குறைத்துவிட்டது. இது அமெரிக்காவின் வீழ்ச்சிக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50% வரி விதித்துள்ளது அமெரிக்கா இதற்கு முழு காரணம் , “மரபணு செய்யப்பட்ட அமெரிக்க விவசாய பொருட்களை இந்தியாவில் விற்கலாம் ” என்று டிரம்ப் நினைத்தார். ஆனால், அதற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் விற்க அனுமதி இல்லை என கூறிவிட்டார்.
“இந்திய விவசாயிகள் நலனே எனக்கு முதன்மை. அதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் தயங்கமாட்டேன். விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியாவில் இடமில்லை.” – பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனை தொடர்ந்து தான் இந்தியா மீது வரியை போட்டுள்ளது அமெரிக்கா. உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விவசாயமே அதன் முதுகெலும்பு. மக்கள் தொகையில் பெரும்பாலோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்துள்ளதால், இந்த துறையில் எந்த சமரசமும் இந்தியா செய்யமாட்டது என மோடி தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் அமெரிக்கா விதிக்கும் அதிக வரிகள் இருந்தாலும், இந்திய வளர்ச்சி பாதிக்கப்படாது என Fitch Ratings நிறுவனம் உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்தியா BBB (நல்ல கடன் தரம், குறைந்த தவறுதலின் அபாயம்) என்ற நிலையில் தொடர்கிறது.
Fitch வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ‘BBB’ நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதமான 2.5%-ஐ விட மூன்றரை மடங்கு அதிகமாகும்.அமெரிக்க வரிவிதிப்பால் ஜிடிபி 2% வரை பாதிக்க வாய்ப்புள்ளதாம். ஆனால், “இந்தியாவின் பொருளாதார பலம், சக நாடுகளை விட மிகவும் வலிமையானது” என Fitch அறிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய பிரதமர் மோடியிடம் பேச அதிபர் டிரம்ப் முயற்சித்தார். சமீப வாரங்களில் நான்கு முறை டிரம்ப் பேச முயற்சி மேற்கொண்டும், இந்திய பிரதமர் பேச மறுத்து விட்டார் என்று ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமரின் செயல், அமெரிக்க அதிபர் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை காட்டுவதாக உள்ளது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பெர்லின் நகரை தலைமையிடமாக கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தின் இயக்குனர் தார்ஸ்டன் பென்னரும் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.டிரம்ப், ஏற்கனவே வியட்நாம் அதிபருடன் போனில் அரைகுறையாக பேசி விட்டு, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமலேயே ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்தவர்.
அதே போன்ற சதி வலையில் தாமும் சிக்கி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபருடன் பேசாமல் தவிர்ப்பதாகவும், அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.