
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட முக்கிய வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 50% வரை சுங்கவரி விதித்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெளிவந்த உடனே, சர்வதேச வணிகத் துறையிலும், உலக நாடுகளின் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய வாணிக அமைப்பின் (WTO) விதிமுறைகளுக்கு முரணானதாகவே பலர் இதை கருதுகின்றனர். ஏற்கனவே அமெரிக்கா, “அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நாடுகள்” என்ற பெயரில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இம்முறை, உலகின் பெரிய வளர்ச்சி சந்தைகளில் ஒன்றான இந்தியாவையும், வேகமாக வளரும் பிரேசிலையும் நேரடியாக இலக்காகக் கொண்டிருப்பது “அநியாயமான நடவடிக்கை” என சர்வதேச சமூகத்தின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவே உலகில் அதிக சுங்கவரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாகசொகுசு கார்கள், இறக்குமதி,பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இறக்குமதி , மரபணு மாற்றப்பட்ட பழங்கள் போன்றவற்றிற்கு 130% வரை சுங்கவரி விதிக்கப்படுகிறது.அடிப்படை சுங்கவரி (Basic Customs Duty): 100%
விவசாய மேம்பாட்டு செலுத்துகை (AIDC): 10%சமூக நலச் சுங்கம் (SWS): 10% ஜி.எஸ்.டி (GST): 12% என இவை அனைத்தும் சேர்ந்து, இறக்குமதி செய்யும் பொருளின் விலையை மூன்று மடங்கு உயர்த்துகிறது. அதனால் இந்தியாவின் நிலைப்பாடு – “வெளிநாட்டு பொருட்கள் எங்களுக்கு தேவையில்லை” என்பதே.அனைத்தும் இந்தியாவில் இருக்கிறது இதில் ஏன் வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவிற்கு வேண்டும் என இந்தியா செயல்பட்டுவருகிறது.
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் – அமெரிக்கா “வரி விலக்கு” கொடுத்திருப்பது, பொதுவாக மக்களுக்கு உதவுவதற்காக இல்லை. மாறாக, தங்கள் நாட்டின் பெரிய நிறுவனமான Apple ஐ பாதுகாப்பதற்காக தான்.
பெட்ரோலியம் பொருட்கள் – இந்தியா, அமெரிக்காவிற்கு அனுப்பும் அளவை குறைத்தால் நல்லது. அதோடு, ஐரோப்பாவுக்கும் தேவைக்கு அதிகமாக அனுப்ப வேண்டாம் என்று வல்லுநர்கள் சொல்லுகின்றனர்.
ஜெனெரிக் மருந்துகள் – அமெரிக்கா மீது முழு நம்பிக்கை வைப்பதைவிட, அந்த மருந்துகளை ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் அனுப்பலாம். அங்கே உள்ள மக்கள் உண்மையில் இம்மருந்துகளை தேவைப்படுகிறார்கள்; அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
உலக வாணிகத்தில் “தடை” என்ற வார்த்தை எப்போதுமே காகிதத்தில் மட்டும் இருக்கும். நடைமுறையில் நாடுகள் பல வழிகளில் அதைத் தாண்டி செல்கின்றன. நேரடியாக அனுப்ப முடியாத பொருட்களை, “மூன்றாம் நாடுகள்” வழியாக அனுப்புவது பல தசாப்தங்களாக நடந்து வரும் பழக்கம்.இந்தியாவுக்கும் அத்தகைய வாய்ப்பு இருக்கிறது. தேவைப்பட்டால் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகள் வழியாக அமெரிக்க சந்தையை எளிதாக அடையலாம் என வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
இந்தியா எப்போதும் வலியுறுத்தி வரும் கருத்து தெளிவானது:எந்த வரி போரும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.இந்தியா எப்போதும் ஆக்கிரமிப்பு மனநிலையின்றி, பரஸ்பர நலனைக் கருதி வியாபாரம் செய்கிறது.”அமெரிக்காவின் இந்த “வரி போர்” தற்காலிக தாக்கம் ஏற்படுத்தலாம். ஆனால், இந்தியாவின் நீண்டகால முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்பதே நிபுணர்களின் உறுதி.