
அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது இது குறித்து அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஜெஃப்ரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்தியா அனுமதிக்கவில்லை.இதனால், ட்ரம்பிற்கு ஏற்பட்ட தனிப்பட்ட கோபமே வரி விதிப்பதற்கான முக்கிய காரணமாகும். என கூறியுள்ளது
அறிக்கையில் கூறப்பட்டதாவது: இந்த வரிகள் வர்த்தக சண்டைக்காக அல்ல. இந்தியா–பாகிஸ்தான் பிரச்சினையில் நடுவராக இருக்க ட்ரம்ப் விரும்பினார். ஆனால் இந்தியா மறுத்ததால் அவர் கோபம் கொண்டார். இதுவே இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்க காரணமாகியுள்ளது.
ட்ரம்ப், “இந்தியா–பாகிஸ்தான் அணு போரை நான் தடுத்தேன்” என்று கூறினார். ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சகம் அதை மறுத்து, “இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் நேரடியாக பேசி எட்டிய முடிவு. அமெரிக்காவுக்கு சம்பந்தமே இல்லை” என்று விளக்கியது. மேலும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பிரச்னைகளில் பிற நாடுகளை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய திட்டவட்டமாக தெரிவித்துள்ளது." இதனால் டிரம்ப்பின் நோபல் பரிசு கனவு கலைந்தது.
அடுத்ததாக, விவசாயமும் இந்தியா மீதான வரிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.இந்தியாவில் 250 மில்லியன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். இந்தியாவின் 40% தொழிலாளர்கள் விவசாயத்தைத் தான் நம்பி இருக்கிறார்கள். அதனால், இந்திய அரசு விவசாயத் துறையில் இறக்குமதிகளை ஊக்குவிக்கவில்லை. இதுவும் ட்ரம்ப் அரசாங்கம் வரி விதித்ததற்கான முக்கிய காரணமாக உள்ளது.
இந்த வரிகள் நீடித்தால் இந்தியா சீனாவுக்கு நெருங்கும் அபாயம் உள்ளது. செப்டம்பரில் இந்தியா–சீனா நேரடி விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. சீனாவில் இருந்து இந்தியா ஏற்கனவே ஆண்டுக்கு 118 பில்லியன் டாலர் மதிப்பில் பொருட்கள் வாங்குகிறது.
இந்நிலையில், மத்திய அரசு நடுத்தர வர்க்கத்துக்கு வருமான வரி குறைப்பு அறிவித்துள்ளது. GST படிகள் நான்கிலிருந்து இரண்டாக எளிமைப்படுத்தப்பட உள்ளன. ரிசர்வ் வங்கி 100 பாயிண்ட் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.ஜெஃப்ரிஸ் எச்சரிக்கையில் கூறியது: “இந்த 50% வரி ட்ரம்பின் தனிப்பட்ட கோபத்தால் வந்தது. ஆனால் இது நீண்ட நாள் நீடித்தால்,அமெரிக்காவுக்கு சிக்கலை உண்டாக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முனைப்பு காட்டி வந்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் , பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கூறும்பொது, “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர இருக்கிறார்.
ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது போர் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள். உக்ரைன் அதிபரின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார். கடைசியில் இந்தியா தான் ரஸ்யா உக்ரைன் போரை நிறுத்தும் என உலக நாடுகள் பேச ஆரம்பித்துவிட்டது இது டிரம்ப் தலையில் இடியை இறக்கியுள்ளது