
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் காரணமாக இந்தியாவை விட அமெரிக்காதான் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை இந்தியாவின் மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரமும் அமெரிக்க பால் மற்றும் விவசாய பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யா ஏற்றுக்கொள்ளாததும் தான் இந்தியா மீது டிரம்ப் வரி போட காரணம்.
அதுமட்டுமில்லாமல் உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வளர்ந்து வருகிறது. தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறியுள்ளது. 2028ம் ஆண்டுக்குள் சந்தை மாற்று விகித அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். 2038 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறும் என்றும் IMF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா தனது ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி வாடிக்கையாளர்களில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது. உக்ரைனில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விரும்புகின்றன. இது மேற்கூறிய காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதமாகும், என்று டிரம்ப் இந்தியாவை கடுமையாக எச்சரித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து தான் வரி போட்டுள்ளார் டிரம்ப். இது ஒரு புறம் இருந்தால் இந்தியா மீது வரி போட்டால் இந்தியா நிறுவன பொருட்களை, இந்திய உற்பத்திகளை அமெரிக்கர்கள் வாங்குவதை குறைப்பார்கள் என்ற எண்ணம் தான் டிரம்ப்க்கு ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.ஆனால் இந்த வரி விதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள்தான். உதாரணமாக1. இப்போது இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25% வரை வரிகளை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்க விற்பனையாளர் ஒருவர் கப் அண்ட் சாஸர் ஒன்றை இறக்குமதி செய்தால்.. அதற்கு 25% வரி விதிக்கப்படும். ஆனால் இதை யார் கொடுப்பார்?
இந்தியர்கள் இதை கொடுக்க மாட்டார்கள்.. இந்திய நிறுவனம் கொடுக்காது. இந்த வரியை இறக்குமதி செய்பவர்தான் கொடுப்பார். அதாவது யார் இறக்குமதி செய்கிறார்களோ.. அமெரிக்காவை சேர்ந்த அவர்கள்தான் கூடுதல் வரி போடுவார்கள்.
இதற்காக ஏற்படும் செலவை சமாளிக்க அவர்கள் விலையை ஏற்றுவார்கள். அதாவது இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த செலவை ஏற்கும்.அந்த விலையை கொடுக்க போவது அமெரிக்கர்கள்தான். அமெரிக்க மக்கள்தான்.
சில விவசாய பொருட்களின் விலையை ஏற்ற முடியாத பட்சத்தில்.. அதை இறக்குமதி செய்யும் விவசாயிகள்தான் சமாளிக்க வேண்டும். அவர்கள்தான் இழப்பை சந்திப்பார்கள். டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. அங்கே பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.
2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன. இதில் நேரடியாக இந்தியா பாதிக்கப்பட்டாலும் மறைமுகமாக அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.