24 special

உலக அரசியலை மாற்றும் புதிய அத்தியாயம்! டிரம்புக்கு மோடி கொடுத்த நேரடி பதிலடி! வாயை பிளந்த அமெரிக்கா!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த கடுமையான சுங்க வரிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். ஆனால், இதன் எதிர்பாராத விளைவு, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று சக்திவாய்ந்த நாடுகளை ஒன்றிணைந்து, ஒரு புதிய உலகப் பொருளாதார சக்தி மையமாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.


பாரத பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜப்பான் செல்கின்றார். அங்கு அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல முக்கிய ஆலோசனைகள் நடைபெறவிருக்கின்றன. ஜப்பான் பயணத்திற்கு பின், அவர் சீனாவுக்கும் புறப்படுகிறார்.

ஜப்பானுக்குச் செல்வது மோடிக்கு வழக்கமான  ஒன்று தான். ஏனென்றால் ஜப்பான் நமது கூட்டாளி. இது ஒருபுறம் இருந்தாலும் , 2018-ம் ஆண்டிற்கு பின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் சீனாவுக்கு செல்கின்றது இதுவே முதல்முறை என்பதால் உலகம் கவனிக்கின்றது.

ஜப்பான் குவாட் அமைப்பில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி. இரண்டாம் உலகப்போருக்குப் பின், அதன் ராணுவ, பொருளாதார பலம் பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்தே இருக்கின்றது. ஆனால், டிரம்பின் வரி கொள்கைகளில் ஜப்பானும் தப்பவில்லை. 15% வரி விதிப்பால் ஜப்பான் உள்ளே டிரம்புக்கு எதிரான அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஜப்பான் – இந்தியா நெருக்கம் வளர்வது அமெரிக்கா தலையில் இடியை இறக்கியுள்ளது மோடியின் ஜப்பான் பயணம்

ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு  சீனாவுக்கு செல்கின்றார் மோடி. அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அவரை சந்திக்கின்றனர். இது, டிரம்பின் உலக அரசியல் தந்திரங்களுக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கு மிக முக்கியமான கணினி, மொபைல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு தேவைப்படும் அரிய காந்தவகை மணலை சீனா ஏற்கனவே கொடுக்க முன்வரவில்லை. இதனால் டிரம்ப் 100% 200% வரி என மிரட்டிய நிலையில், சீனா அதை பொருட்படுத்தவில்லை. மாறாக, அதே அரிய மணலை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. இதுதான் உலகத்தின் புதிய பாதையை உருவாக்க வழிவகுத்துள்ளது. 

இந்த சலுகை அமெரிக்கா தலையில் இடியை இறக்கியதற்கு போன்று  அமையும். அதுமட்டுமில்லாமல் இந்தியா-சீனா உறவு வலுப்படுவதால், உலக அரசியலில் புதிய கூட்டணி  உருவாகும்.இந்த கூட்டணியை தான் உலகமும் தற்போது விரும்பியுள்ளது. அமெரிக்க  சுயநல சதிகள் காரணமாக உலகம் குழப்பத்தில் இருக்கும் வேளையில், பாரத பிரதமர் மோடியின் இந்த ஜப்பான் – சீனா பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் இந்திய நிறுவனங்கள் தற்போது  தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகின்றன. விமான நிறுவனங்கள் கூட அமெரிக்க ஒப்பந்தங்களை கைவிட்டு, ஐரோப்பா நோக்கி நகர்கின்றன. பாதுகாப்பு துறையில் ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் என வலுவான கூட்டணிகள் நமக்குண்டு. எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஜப்பான் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன. ஆனால் இவை எல்லாம் தாண்டி செயற்கைகோள் முதல் அணுசக்தி வரை இந்தியாவே தன்னிறைவு அடைந்துள்ளது.

இந்தியாவின் ஜவுளி, மீன் போன்ற ஏற்றுமதி பொருட்களை அமெரிக்கா தடுத்தாலும், அதை இந்தியாவுக்குள் விற்கவும் மாறாக, ரஸ்யாவில் விற்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல்   இந்தியா அமெரிக்காவின் விமானத் தொழில்நுட்பங்களை தவிர்த்தால், நஷ்டம் அவர்களுக்கே.இந்தியா மூலம் பல்லாயிரக்கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் ஐரோப்பாவுக்குச் செல்லும். அதுவே “மேக் இன் இந்தியா” திட்டத்துக்குப் புதிய உயிரை அளிக்கும்.  மேலும் அரியவகை கனிமவளங்ளை சீனா நமக்கு தந்தால் அது மூலம் மென்பொருள் தயாரிப்பில் புதிய அத்தியாயத்தை இந்தியா தொடங்கும்.