24 special

திடீர் ட்விஸ்ட்.. பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவர் யார்? நாடே எதிர்பார்த்த அந்த டைம் வந்தது!

PMMODI,JPNADDA
PMMODI,JPNADDA

பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவராக மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா, பொறுப்பு வகித்து வருகிறார்.  பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2023 ஜனவரியில் தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதன் பின் பலவேறு அரசியல் ஆட்சி காரணங்களுக்காக நட்டா அவர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. 


இதற்கிடையில் புதிய தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ஆலோசனை பா.ஜ.கவுக்குள்தீவிரமாக  ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே புதிய தலைவர் யார் என தெரிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தேசியத் தலைவர் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற முக்கிய மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்காக கட்சியின் உயர்மட்ட குழு, மாநிலப் பதவிக்கான வேட்பாளர்களின் குழுவை அமைத்துள்ளதாகவும், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி முடிந்த பிறகு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

பாஜக தலைவர் ரேஸில் தற்போது மத்திய விவசாயத்துறை அமைச்சர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் முன்னணியில் உள்ளார்கள். மேலும்   தர்மேந்திர பிரதான்,மனோகர் லால் கட்டார், வானதி சீனிவாசன்,அனுராக் தாகூர், ஸ்மிருதி இரானி, கிசான் ரெட்டி, வசுந்தரா ராஜு  பெயர்களும் அடிபட்டு வருகிறது. 

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை, சிவராஜ் சிங் சௌகான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்., கடந்த 2024 ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் பாஜக  தோல்வியை சந்தித்தது, இதனால் அவரை மோடி தேசிய தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் , ராஜஸ்தானை சார்ந்த பூபேந்திர் யாதவை  தேசிய தலைவராக தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பூபேந்திர் யாதவ் இதுவரை 10 தேர்தலுக்கும் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டுபாஜகவை  வெற்றிபெற்றவராகியுள்ளார். அவரை தேசிய தலைவராக நியமிப்பது பிஜேபிக்கு அரசியல் ரீதியாக பலனாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மனோகர் லால் கட்டார் பெயரும் முன்னணியில் உள்ளது. 

செப்டம்பர் 9 அன்று துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு, பிஜேபியின் புதிய தேசிய தலைவரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பூபேந்திர் யாதவ் அல்லது  மனோகர் லால் கட்டாரை புதிய தேசிய தலைவராக அறிவிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதுவரை பீகாரில் 52 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாஜக , பீகாரின்  மாநில தேர்தல் பொறுப்பாளரை அறிவிக்காமல் உள்ளது .  கடந்த 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்த பூபேந்திர் யாதவ்,தற்போது  பாஜகவின்  புதிய தேசிய தலைவராக வர வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் தான் என்னவோ மாநில பொறுப்பாளரை நியமிக்காமல் உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே நடைபெறும் என்று கூறப்படுகிறது. பீகார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தேர்வு நடைபெறவில்லை என்றால், நியமனம் ஒத்திவைக்கப்பட்டு தேர்தலுக்குப் பிறகுதான் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.