24 special

சத்தமில்லாமல் அமெரிக்கா நிறுவனங்களை பொளந்த மோடி! 40% வரியால் ஆடிப்போன டிரம்ப்! இந்தியாவை சீண்டினால் இதுதான் 'கதி

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்தியாவின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம், முந்தைய நான்கு அடுக்குகளைக் கொண்ட வரி அமைப்பை குறைத்து, இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) மாற்றியுள்ளது. பால், முட்டை, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், தனிநபர் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடுக்கு வரி கிடையாதுஏசி, டிவி, சிறிய ரக கார், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, விவசாயப் பொருட்கள் உள்பட 175 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது ஆடம்பர பொருட்கள், குட்கா, பான்மசாலா, சொகுசு கார், சிகரெட், குளிர்பானங்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க தலையில் இடியை இறக்கியுள்ளது. இது தான் மோடியின் தரமான சம்பவம். 


ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாகக் கூறி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்​துள்​ளது. இது உலக நாடு​களுக்கு விதிக் கும் மிக அதி​கபட்ச வரி ஆகும். இதையடுத்து இந்​தி​யர்​கள் மத்​தி​யில் அமெரிக்கா​வுக்கு எதி​ரான மனநிலை உரு​வாகி உள்​ளது. குறிப்​பாக, பெப்​சி, கோக-கோலா, சப்​வே, மெக்​டொ​னால்ட்​ஸ், கேஎப்சி உள்​ளிட்ட அமெரிக்க தயாரிப்​பு​களை இந்​தி​யர்​கள் புறக்​கணிக்க தொடங்கி உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் அதிக வரி காரண​மாக, பிரான்​ஸ், இங்​கிலாந்​து, கனடா உள்​ளிட்ட நாடு​களும் அமெரிக்க பொருட்​களை ஏற்​கெனவே புறக்​கணிக்​கத் தொடங்கி விட்​டன. இந்த சூழ்​நிலை​யில், 140 கோடி மக்​களைக் கொண்ட இந்​தி​யா​வும் புறக்​கணிக்​கும்​போது அமெரிக்க நிறு​வனங்​கள் மிகப்​பெரிய இழப்பை சந்​திக்​கும். மெக்​டொ​னால்ட்ஸ் உணவகங்​களை மேற்கு மற்​றும் தென்​னிந்​தி​யா​வில் நடத்​தும் வெஸ்ட்​லைப் புட்​வேர்ல்டு கடந்த நிதி​யாண்​டில் ரூ.2,390 கோடி வரு​வாய் ஈட்​டியது. இது முந்​தைய ஆண்​டை​விட 5% அதி​கம்.

இது​போல பெப்​சிகோ நிறு​வனம் ரூ.8,200 கோடி வரு​வாய் ஈட்டி உள்​ளது. இந்​நிறு​வனம் கடந்த 3 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்​தது குறிப்​பிடத்தக்​கது.இந்த நிலையில் தான் குளிர்பானங்களுக்கு 40%வரியை விதித்துள்ளார் பிரதமர் மோடி. இது அமெரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையாற்றி வருகிறது இந்தியா. 

40%வாரியால் பெப்​சி கோக-கோலா போன்ற குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் தள்ளப்படும். ஏற்கனவே வரி விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்கள் டிரம்ப்க்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இந்தியாவின் நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரும் மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா இந்தியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்காமல் விட்டுவிட்டால், அமெரிக்க பொருளாதாரம் குலுங்கும். அங்கு விலையேற்றம் அதிகரிக்கும். 

டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பு, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு உள்ளிட்டவை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிப்பது வரும் நாட்களில் அதிகரிக்கலாம். ஏனென்றால் நம் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற நடவடிக்கையை தொடங்கினர்.

உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் போரில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வது, துருக்கி நிறுவனங்களுடன் மேற்கொண்ட தொழில் ரீதியிலான ஒப்பந்தம், துருக்கி ஆப்பிள் உள்ளிட்டவற்றை நம் நாட்டு மக்கள் புறக்கணித்தனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரம் சக்சஸ் ஆகும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது.