
உலக அரசியலில் தன் சுயநலத்துக்காக முடிவுகளை எடுத்து வருபவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,இந்தியாவுக்கு எதிராக வரியை விதித்து இந்தியாவை கடுமையாக சாடினார். இந்த நிலையில் இந்தியாவின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டை பார்த்து கீழே இறங்கி வர தொடங்கியுள்ளார் தனது நிலைப்பாட்டை தளர்த்தி, தற்போது மீண்டும் நட்பு கை நீட்டும் சூழ்நிலையில் வந்து நிற்கிறார் . ஒருகாலத்தில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்து இந்திய அமெரிக்க உறவுக்கு சூடு வைத்த ட்ரம்ப், இன்று அதே இந்தியாவை பாராட்டி, மோடிக்கு புகழாரம் சூட்டும் நிலைக்கு வந்துள்ளார்.
டிரம்ப் “Buy American” என்ற கோஷத்துடன் இந்தியாவுக்கு அதிக வரி விதித்தார். “இந்தியா நம்மை சுரண்டுகிறது” என்ற குற்றச்சாட்டை பலமுறை உலக அரங்கில் ஒலித்தார். இதனால், இந்தியா–அமெரிக்கா உறவு திடீரென பனிப்பாறை போல உறைந்துவிட்டது.
டிரம்ப் வரிக்கு இந்தியா நேரடியாக எந்தவொரு பதிலடியையும் தரவில்லை என்றாலும் மறைமுகமாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் உடனான அமெரிக்க வர்த்தகம் $399 பில்லியனைத் தாண்டி விட்டது. இந்த பிரிக்ஸ் அமைப்பையும் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வந்திருந்தார். ஆனால், அதையும் தாண்டி வர்த்தகத்தை இந்தியா அதிகரித்துள்ளது.
மேலும், இந்த அமைப்பின் நியூ டெவலப்மெண்ட் வங்கியில் இருந்து எரிசக்தி மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கான கடனையும் பெறும் நடவடிக்கையை இந்திய ஆரம்பித்துள்ளது.இந்தியாவின் பொருளாதாரமும், சர்வதேச செல்வாக்கும் புதிய பாதையில் சென்றதால், அமெரிக்காவே அதிர்ச்சி அடைந்தது.
இந்தியா என்பது கனடா, மெக்சிகோ போல முழுக்க முழுக்க அமெரிக்க வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் நாடு இல்லை. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட அணுசக்தி கொண்ட நாடு என்பதை டிரம்ப் தரப்பு மறந்துவிடுகிறது.அமெரிக்காவிற்குள்ளேயே இந்தியாவை இழப்பது அமெரிக்காவுக்கு எந்தளவுக்கு ஆபத்தை என்பதைப் பல்வேறு தரப்பினரும் விளக்கி வருகிறார்கள். ட்ரம்பின் சொந்தக் கட்சியிலேயே அவரது முடிவுகளுக்கு எதிர்ப்பு எழுந்தது.
இதன் மூலம், இந்தியாவை புறக்கணிப்பது அமெரிக்காவுக்கே பாதகம்தான் என்பதை ட்ரம்பும், அவரது அணியும் உணர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.காலம் கடந்து செல்ல, ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மெதுவாக மாற்றத் தொடங்கினார். முதலில் தனது Truth Social தளத்தில் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவை நெருங்கிவிட்டதாகவும், இந்த கூட்டணி அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாகவும் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில், “மோடி ஒரு சிறந்த பிரதமர். அவருடன் நல்ல நண்பனாக இருப்பேன்” என்று கூறினார். மேலும், “இந்தியா–அமெரிக்கா உறவு வலிமையானது. யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்றும் வலியுறுத்தினார்.
அதிபரின் பாராட்டுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நிதானமான பதிலை அளித்தார். “இந்தியா–அமெரிக்கா உறவு எப்போதும் நேர்மறையானதும், தொலைநோக்குப் பார்வையுடனும் அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார். மோடியின் இந்த நடை, நாட்டின் கௌரவத்தை காப்பாற்றும் வழக்கமான அவரது அரசியல் பாணியையே வெளிப்படுத்தியது.
தற்போது அமெரிக்காவின் மூத்த தலைவர்களும் இந்தியாவை நோக்கி நேர்மறையான கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். ட்ரம்பும் அவரது பரிவாரமும் இந்தியாவை நோக்கி வெள்ளைக் கொடியை உயர்த்தி நிற்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்கக் கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளில் சுமார் 50%ஐ திருப்பித் தரும் சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்படலாம் என தெரிவித்தார். அதாவது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வரிகள் தொடர்பான வழக்கு நடக்கும் சூழலில், அதில் பாதகமான தீர்ப்பு வந்தால் அமெரிக்கா வரிகளை ரீஃபண்ட் செய்ய வேண்டி இருக்கும் என அவர் குறிப்பிட்டார். வரி விவகாரத்தில் பல மாற்று வழிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பெசென்ட், இருப்பினும் சுப்ரீம் கோர்ட் எதிரான தீர்ப்பைக் கொடுத்தால் அது டிரம்ப்பின் பேச்சுவார்த்தை நிலையைப் பலவீனப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். அதாவது வரிகளைக் கொண்டு வரி வேறு வழிகள் இருந்தாலும் நீதிமன்ற உத்தரவு டிரம்ப்பிற்குப் பின்னடைவைத் தரும் என்றார்.