Covid-19

அடேங்கப்பா..! ஓமைக்கிரான் பற்றி மக்கள் என்ன சொல்றாங்க பாருங்களேன்..!

Omaigron virus
Omaigron virus

கரோனாவிலிருந்து மீண்டு வராத இப்படி ஒரு தருணத்தில் மீண்டும் பேரிடியாக வந்து கொண்டிருக்கும் ஒமிக்கிரான் வைரஸ் குறித்த பயம் மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது என்றாலும் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான புரிதல் ஏற்பட்டிருக்கும். 


உலக நாடுகளை பொருளாதார ரீதியாகவும், மக்களின் ஆரோக்கிய ரீதியாகவும் மிகவும் பாதிப்படைந்து இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிப்பை குறைக்கவும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு ஓரளவுக்கு முடிவு பெறும் நிலையில், இந்த ஒரு தருணத்தில் அடுத்த வைரஸ் புதிதாக வருகிறது என்றால் மக்களின் பார்வை அதன்மீது சற்று வேறுபட்டு இருக்கின்றது. 

ஒமிக்கிரான்  உலக சுகாதார மையம் இதுவரை 23 நாடுகளில் ஓமைக்ரான் வைரஸ் ரிப்போர்ட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவும் தற்போது இடம்பெற்று இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்து இருந்தாலும், இதனை எதிர் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து இருக்கின்றார் அமைச்சர் மா.சும்பரமணியன்.

இதுகுறித்து முதல்வர் தெரிவிக்கும்போது, ஓமைக்ரான் வைரஸ் நம்மை பயமுறுத்த தொடங்கி இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் சக்தி தமிழக மக்களிடம் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பல மருத்துவமனைகளில்,ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டால் அவர்களை அனுமதிப்பதற்கு தனி வாடும் தயாராக இருக்கின்றது. இப்படியான தருணத்தில் மக்களின் புரிதல் எவ்வாறு இருக்கிறது என்ற கேள்விக்கு முகநூலில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் உங்களுக்காக.....


அதில் முக்கியமாக.......... இப்பவே அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை மூட வேண்டும், என்னத்த சொல்றது, பயம் வேண்டாம், மாதம் 15 ஆயிரம் கொடுத்து நான்கு மாதம் லாஃடவுன் போடணும் அரசு என்றும் பல்வேறு நபர்கள் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். ஆக மொத்தத்தில், கொரோனாவையே பார்த்து  விட்டோம். இதென்ன ஜுஜுப்பி என்பது போல் தங்களது கருத்தை முன்வைக்கின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.