
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி பலமான கூட்டணி என கூறிவந்த ஸ்டாலின் தலையில் இடியை இறக்கியுளது கூட்டணி கட்சிகள். கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக பாஜக கூட்டணி தான் உடையும் பொருந்தாத கூட்டணி என விமர்சித்து வந்த திமுக கூட்டணி தற்போது உடைய துவங்கி உள்ளது. இந்த நிலையில் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி பக்கம் புயலை வீச தொடங்கியுள்ளது.
சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவா பங்கேற்றார். ஜூலை 15 மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் என்பதால் அது தொடர்பாகவும் பேசினார் சிவா. முன்னாள் முதல்வர் கருணாநிதி காமராஜர் குறித்து பேசுகையில் காமராஜர் அவர்கள் ஒருநாள் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடுகிறார். காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும், அவரது உடல்நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்று கருணாநிதி கூறினார். மேலும் ணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, ''நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்'' என்றாராம். இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
''வைரவா அந்த விளக்கை அணை'' என்று உதவியாளரிடம் கூறி விட்டு படுக்க சென்ற காமராஜரின் உயிர் பிரிந்தது என்பதே பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால், உயிர் பிரியும்போது கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு, நாட்டை காப்பாற்றுங்கள் எனப் பேசியதாக 'புது' தகவலை திருச்சி சிவா கூறியது சர்ச்சையாகியுள்ளது.
,திமுக எம்.பி திருச்சி சிவா காமராஜர் குறித்து தெரிவித்த கருத்து பூதகரமாக வெடித்துள்ள நிலையில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் முட்ட தொடங்கியுள்ளது. திமுக என்ன பேசினாலும் வேடிக்கை பார்த்து வந்த காங்கிரஸ் தற்போது பொங்கியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் ஆச்சரியத்தால் ஆழ்த்தியுள்ளது. திமுகவுக்கு முட்டுக்கொடுத்து வந்த காங்கிரஸா இது என காங்கிரஸ்காரர்களே வாயை பிளந்து பார்க்கிறர்கள். திமுக எம்.பி சிவா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் . அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. என பதிலடி கொடுத்துள்ளது காங்கிரஸ்.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தரப்பில் இருந்து அமைச்சரவையில் பங்கு என்ற குரல் எழுந்துள்ளது. ஒருவேளை தாவெக மற்றும் பாமகவை வைத்து கூட்டணி அமைக்கலாம் என்ற நிலைப்பாட்டில் தான் காங்கிரஸ் உள்ளது அதற்கான எதிர்வினை தான் இது என கூறப்படுகிறது