24 special

அண்ணாமலை வெளியிட்ட வீடியோ! சினிமாவை மிஞ்சிய காட்சி! 10 வயது சிறுமிக்கு நடந்த பா*யல் வன்கொ*மை! அதிர்ச்சியில் தாய்மார்கள்!

ANNAMALAI,MKSTALIN
ANNAMALAI,MKSTALIN

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றே பிறகு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது என்ற குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.  அனுதினமும் பல குற்றங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன சிறுமிகள் கடத்தி பலாத்காரம் மூதாட்டிகளுக்கு பாலியல் சீண்டல்கள் ஏன் இந்த காமகண்கள் ஆண்களைக் கூட விட்டு வைக்கவில்லை ஒரு பள்ளி சிறுவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தலையில் பலத்த காயங்களுடன் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் வீசப்பட்ட சம்பவம், காவலர்களால்  அஜித் எனும் இளைஞர் அடித்தே  கொல்லப்பட்டது ஆசிரியர் மீதான பாலியல் குற்றங்கள் மத போதகர்கள் மீதான பாலியல் குற்றங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். இதெற்கெல்லாம் காரணம்  மது போதை, கஞ்சா மெத்த பெட்டமின் சகஜமாக அதிகமாக கிடைப்பதால் தான் தான் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல்  வழிப்பறி குற்றங்கள் வாகன விபத்துக்கள் என்று தமிழ்நாட்டில் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஏன் அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்தில் திமுக அனுதாபி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னால் உள்ள சார் மர்மம் வெளியே வரவில்லை. ஆளும்கட்சி போர்வையில் கட்ட பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 


இதற்கிடையில் திருவள்ளூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக சிறுமி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது நபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியை தூக்கிச் சென்றது தொடர்பான பகீர்  காட்சி வெளியாகி இருக்கிறது. 

இது குறித்து பாஜக முன்னாள் தலைவர்  அண்ணாமலை அவர்கள் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி  அரசுக்கு கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :   திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.குற்றம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. 

சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இத்தனை தைரியமாக, சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி, இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை இனியும் தாமதிக்காமல்,  உடனடியாக இந்தக் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தமிழக தாய்மார்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.