
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக இஸ்ரேல் பாலஸ்தீனம் போர், இஸ்ரேல் ஈரான் போர், தற்போது இஸ்ரேல் சிரியாவுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. ஒரே நேரத்தில் 3 நாடுகளை பொளந்து கட்டி வருகிறது இஸ்ரேல். தற்போது சிரியா மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். சிரியாவில் தற்போது கிளர்ச்சியாளர்கள் ஆட்சி நடந்து வருகிறது. அடிப்படை இஸ்லாமிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் சன்னி பிரிவை சார்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் சிரியாவில் இஸ்லாமில் இருந்து பிரிந்த இரண்டு பிரிவுகளும் வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒன்று பிடோயின் அமைப்பும் இவர்கள் முழுவதுமா சன்னி பிரிவை தங்களின் முன்னோர்களாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். மற்றொரு பிரிவு ட்ரூஸ் பிரிவு இவர்களை இஸ்லாமியர்களாக சிரியா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் சிரியாவில் மைனாரிட்டியாக இருந்தாலும் ஸ்வீடா என்ற பகுதியில் மெஜாரிட்டியாக இருந்து வருகிறார்கள். 10ம் நுாற்றாண்டில் ஷியா முஸ்லிம் பிரிவில் இருந்து உருவான இஸ்மாயிலிசத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என கூறுகிறார்கள்.
ட்ரூஸ் பிரிவினர் சிரியாவில் நடந்த, 14 ஆண்டுகால உள்நாட்டு போரில் முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத் அரசுக்கு எதிராக ட்ரூஸ் மதத்தினர் போராடினர். இந்த நிலையில், சமீபத்தில் சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் ட்ரூஸ் மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.இந்த விஷயம் பெரிதாக வெடித்தது. மேலும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. ட்ரூஸ் மதத்தினர் தங்களுக்கு என இராணுவம் வரை கட்டமைத்துள்ளார்கள். என்பது குறிப்பிட தக்கது.
இதனிடையே இங்கு அமைதியை ஏற்படுத்த சிரிய ராணுவப் படைகள் அனுப்பப்பட்டன. அவர்களுக்கும் ட்ரூஸ் மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ட்ருஸ் மதத்தை சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையே த்ருஷ் அமைப்பினர் மெஜாரிட்டியாக இருக்கும் நம் பகுதியில் வந்து அவர்கள் எப்ப்டி நம்மை தாக்கலாம் என சன்னி பிரிவை சார்ந்தவர்களை நாடு ரோட்டில் வைத்து தூக்கிலிட செய்தனர். ஆபத்தை புரிந்து கொண்ட சிரிய சீஸ் பயர் அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தியத்துயது. போர் நிறுத்தம் செய்த ஒரு மணிநேரத்தில் சன்னி பிரிவை சேர்ந்த பிடோயின் அமைப்பு ட்ருஸ் மக்கள் வாழும் பகுதியில் குண்டை தொக்கி எறிந்தது. இதுட்ருஸ் அமைப்புக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வாசலில் குண்டை வீசியது. இது சிரியாவை கதிகலங்க செய்துள்ளது.
ஈன இஸ்ரேல் இஸ்லாமிய பிரிவான ட்ருஸ் அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது என கேள்விகள் எழலாம் அதற்கு காரணம் த்ருஷ் மக்கள் அதிகமாக வாழும் ஸ்வீடா பகுதி எல்லையை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இஸ்ரேலின் யூதர்களும் ட்ருஸ் மக்களும் நண்பர்களாக பழகி வருகிறார்கள் என்பது தான் காரணம் நண்பேன்டா என்ற கான்செப்ட்டில் சிரியாவின் இதயத்தில் ஈட்டியை விட்டுள்ளது இஸ்ரேல்.
அதுமட்டுமில்லாமல் டமாஸ்கசில் உள்ள சிரிய ராணுவ அமைச்சகத்தின் வளாகம் மற்றும் ட்ரூஸ் மதத்தினர் உள்ள தெற்கு சிரியா நோக்கி சென்ற ராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், ''ட்ரூஸ் மதத்தினர் உள்ள பகுதிகளிலிருந்து சிரியப் படைகளை திரும்ப பெற வேண்டும். இந்த செய்தியை புரிந்துகொள்ளவில்லை என்றால் தாக்குதல் இன்னும் கடுமையாக இருக்கும்,'' என்றார்.இதற்கிடையே ட்ரூஸ் பிரிவினர் உடன் போர் நிறுத்த முடிவு ஏற்பட்டதாக சிரியா கூறியுள்ளது.