
தமிழகத்தை தற்போது உலுக்கியுள்ள சம்பவம் கிட்னி திருட்டு. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து துறைகளும் செயலிழந்து கிடக்கிறது. அனைத்து துறை அமைச்சர்களும் மாரத்தான் ஓடுவது, பேட்டி கொடுப்பது, ஊழல் செய்வது, சமுக நீதி,சிறுபான்மை,பாஜக அதிமுக என பேசி நான்கு வருடத்தை கழித்து விட்டார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூட போராட்டம் கருப்பு கொடி போராட்டம் என ஏதாவது திமுகவினர் செய்துவந்தனர். தற்போது எதையும் செய்யவில்லை. மக்கள் பணியை தவிர அனைத்து வேலைகளையும் செய்து ரீல் போடுவதற்கு ஒரு டீமை வைத்து கொண்டு ஊடகங்களுக்கு பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக வெளியாகியுள்ள செய்திகள் தமிழக மக்களை அதிர்ச்சியளிக்கின்றன. தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது திமுக அரசு..
ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படும் கிட்னிகள் 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாக பகீர் புகார் எழுந்திருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கியது கிட்னி திருட்டு. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களது உடல் உறுப்புகளை விற்பனைக்காக பயன்படுத்தி வந்தது ஒரு கும்பல்.
இந்த கும்பலின் தலைவனாக ஆனந்தன் பள்ளிபாளையம் ஒன்றிய திமுகவில் ஆலாம்பாளையம் பேரூர் பேச்சாளராக பொறுப்பு வகித்து வந்ததாகவும், அவ்வப்போது கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி அந்த பகுதியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்புகையில், ” எப்போது பார்த்தாலும் இதுபோல் ஏதாவது ஒன்று நடக்கும் ஒன்று தான் என்பது போல் ஆட்சியர் அலட்சிய பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் கிட்னி திருட்டு நடப்பதை ஆட்சியரே ஒப்புக் கொள்கிறாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களுக்கு அட்வான்ஸ் மட்டும் கொடுக்கப்பட்டு மீதி பணத்தை தருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மீதி பணத்தை வாங்கினாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை தரப்படாததால் அவர்கள் வாங்கிய பணத்தை சிகிச்சைக்கே செலவழித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான சூழலில் வாழ்வதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது வெளியாகி உள்ள தகவல் படி நாமக்கல் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒற்றைக் கிட்னியுடன் வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கோவை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபல மருத்துவமனைகளும் அதில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு துணை போவது தெரியவந்துள்ளது.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.இது ஒரு புறம் இருக்க கிட்னி திருட்டில் ஈடுபடும் மருத்துவமனைகள் குறித்த பகீர் தகவலும் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நெட்வொர்க் கொண்ட ஒரு மருத்துவமனையும், பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு மருத்துவமனையும் இந்த கிட்னி திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.இதே போல் சென்னை வியாசர்பாடியில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக, கூறி 1.60 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டதாக, தி.மு.க., நிர்வாகி ஆரிய சங்கர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.