Tamilnadu

நாளே கேள்வி நடையை கட்டி ஓட்டம் எடுத்த செய்தியாளர்கள்.. மதுரை ஆதினம் அதிரடி !!

Madurai
Madurai

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த அருணகிரிநாதர் இயற்கை எய்தினார்.


இதைத்தொடர்ந்து மடத்தின் இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வசம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.இந்த நிலையில் அருணகிரிநாதர் இறந்து 10 நாட்களுக்கு பிறகு புதிய ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி  பதவியேற்றார்.

முன்னதாக மறைந்த அருணகிரிநாதருக்கு குரு பூஜை நடைபெற்றது. எளிமையாக நடந்த புதிய ஆதீனம் பதவி ஏற்பு விழாவில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதீனம் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் புதிய ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றனர். பின்பு செய்தியாளர் சந்திப்புகள் அவ்வப்போது நடந்து வருகிறது, இதில் புதிய மதுரை ஆதினம் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றனர், செய்தியாளர்களின் கேள்விக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பதில் அளிப்பதுடன், செய்தியாளர்களையும் தலை தெறிக்க ஓட விடுகிறார்.

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மதுரை ஆதினத்திடம்  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தமிழக முதல்வரை நவீன ராமானுஜர் என கூறுகிறாராரே உங்கள் பார்வை எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆதினம் கொடுத்த பதிலால் செய்தியாளர்கள் வாயடைத்து போயினர், குறிப்பாக ராமானுஜர் என்றால் தமிழக முதல்வர் நெற்றியில் நாமம் இட்டு கொள்வாரா? தமிழில் அர்ச்சனை என கோவிலில் சட்டம் இயற்றும் அரசு, முஸ்லிம்கள், கிறித்தவர்கள் வழிபாட்டை தமிழில் சொல்ல அறிவுறுத்தமா?

அனைவருக்கும் பொதுவானா நபராக அரசு இருத்தல் வேண்டும், ஒரு சமயத்தை குறிவைக்க கூடாது எனவும் பளிச் பளிச் என்று பதில் கொடுத்தார், என்னுடைய பணி இந்து சமயத்தை வளர்ப்பது பாதுகாப்பாது, ஆகம விதிகளை கடைபிடிப்பது என தெள்ள தெளிவாக கூறிவிட்டார் புதிய மதுரை ஆதினம்.

பழைய மதுரை ஆதினம் போன்று புதிய ஆதினம் இருப்பார் என கணக்கு போட்ட செய்தியாளர்கள் இப்போது புதிய மதுரை ஆதினத்தை கண்டாலே தலை தெறிக்க ஓடும் நிலை உண்டாகியுள்ளது, இந்தியாவின் சுதந்திர போராட்டம் மக்கள் புரட்சிக்கு ஆதின மடங்கள் பெரும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசிற்கு எதிராக கேள்விகளை எழுப்பி குறிப்பாக சூரிய கட்சி சானல் நிருபர் அதிகமாக மூக்கு உடைந்தது குறிப்பிடத்தக்கது.