Tamilnadu

இரண்டாவது முறையாக மிரட்டல் விடுத்த வன்னியரசு கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா விசிக?

Stallin and thirumavalan
Stallin and thirumavalan

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இரண்டாவது முறையாக தமிழக காவல்துறைக்கு பொது வெளியில் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மீது வன்னியரசு விமர்சனங்களை வைத்து வந்த சூழலில்  திமுக கூட்டணியில் விசிக வெளியேறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அடுத்த பாலூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடி கம்பத்தை நட ஏற்பாடு செய்து வந்தனர்.  இந்த தகவல் நடுவீரப்பட்டு போலீசாருக்கு செல்ல,  அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.கொடிக்கம்பம் நடுவதை போலீசார் தடுத்தபோது விசிக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பாமகவினர் அங்கே திரண்டு வந்து விசிக கொடிக்கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் இரு கட்சியினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.  அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதை அடுத்து உடனே பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா,  கடலூர் ஆர்டிஓ அதியமான் கவியரசு,  வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   இந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் அனைத்து கட்சியினருக்கும் சம்மன் அனுப்பி முடிவு செய்வதாக குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய வன்னியரசு, #விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு  தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா?இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர்  எல்லை உண்டு என தமிழக காவல்துறையின் அதிகார பூர்வ பக்கத்தை டேக் செய்துள்ளார்.

இந்த சூழலில் வன்னியரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக தமிழகத்தில் உள்ள IPS அதிகாரிகளுக்கு  விடுதலை சிறுத்தைகளின் வரலாறு தெரியவில்லை என மிரட்டல் விடுத்து இருந்தார் தற்போது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வன்னியரசு மீண்டும் மிரட்டல் விடுத்த சூழலில் தமிழக காவல்துறை ஏன் வன்னியரசை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் பொறுமையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மீது குற்றம் சுமத்துவதும் முதல்வரை குற்றம் சுமத்துவதும் ஒன்றுதானே அந்த துறையின் தலைமை அமைச்சர் அவர்தான் அப்படி இருக்கையில் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும் கூட்டணியை விட்டு வெளியேறி குற்றம் சுமத்தலாமே என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.