
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசிய வார்த்தைகள்இந்துக்களின் உணரவுகளை கொந்தளிக்க வைத்த அரசியல் தீப்பொறியாக மாறியுள்ளது. தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளிய திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை சு*டுகாட்டுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. ஒரு இடத்தில் என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். சுடுகாடு இருந்தால் அங்கே தான் பிணங்களை எரிப்பார்கள்” என்ற அமைச்சரின் பேச்சு, திமுக அரசின் மனநிலையை அம்பலப்படுத்திவிட்டதாக சமூக ஊடகங்களிலும், பொது வெளிகளிலும் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.இது ஒரு தவறான உவமை அல்ல; ஆன்மீகத்தை அசிங்கப்படுத்தும் அரசியல் அகந்தை என்பதே மக்களின் ஒரே கருத்தாக வெளிப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகமெங்கும் ஒரு கேள்வி அதிரடியாக எழுந்துள்ளது “அப்படியெனில், மெரினா என்ன சுடுகாடா? முன்னாள் முதல்வர் கருணாநிதியை புதைக்க?”நீதிமன்ற அனுமதி, சட்ட விதிகள், மரபுகள் எல்லாம் தேவையென வாதிடும் திமுக அரசு, தங்கள் தலைவருக்காக மட்டும் மரபுகளை மாற்றியதில்லைதானா? மெரினா கடற்கரை, பொதுமக்கள் ஓய்வெடுக்கும் இடம். அங்கே அடக்கம் செய்யப்பட்டது மரபா? பழக்கவழக்கமா?
அல்லது அதிகாரத்தின் திமிரா? — என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் ஒலிக்கின்றன.
ஒருபுறம், ஹிந்து கோயில்கள், தீபங்கள், வழிபாட்டு முறைகள் என்றால் “பழக்கவழக்கம்”, “மாற்றக்கூடாது” என்ற போதனை.ஆங்கில புத்தாண்டு என்றால் இர்வரு 12 மணிக்கு பூஜை சிஏய கோவில் திறப்பு ஆனால் திருப்பற்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டுமெனில் ஆகமவிதியை பின்பற்ற வேண்டும் என வாதம்,,.இந்த இரட்டை நிலைப்பாடுதான் இன்று திமுகவுக்கு எதிரான பொதுமக்கள் கோபத்தின் மையமாக மாறியுள்ளது.
ஆங்கிலேயே ஆட்சியிக்கு முன்னர் தீப தூணில் தீபம் ஏற்றினார்கள் அதன் பின்னர் தன தீபாம் ஏற்றவில்லை இதை வைத்து வாதம் செய்தது தமிழக அரசு “தீபம் ஏற்றாத இடத்தில் ஏன் தீபம்?” என்று கேள்வி எழுப்பும் திமுக அமைச்சர்கள்,“மெரினாவில் எப்போது புதைக்க அனுமதி இருந்தது?”
என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராக இல்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் வெறும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிய சர்ச்சை அல்ல.இது ஹிந்து மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான திமுக அரசின் தொடர்ச்சியான அணுகுமுறையின் பிரதிபலிப்பு என பார்க்கப்படுகிறது.நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுப்பதும், மேல்முறையீடு என்ற பெயரில் தீர்ப்பை அவமதிப்பதும், அமைச்சர்களின் நாவடக்கமற்ற பேச்சுகளும், மக்களிடையே “இந்த அரசு நமக்கானது அல்ல” என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது.
இன்று தமிழகத்தில் உருவாகி வரும் இந்த மனநிலை தெளிவானது. “; ஆன்மீகம் அரசியல் விளையாட்டு பொருளல்ல” என்ற கோபக் குரல், திமுகவுக்கு எதிரான தேர்தல் கோஷமாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன.அரசு அதிகாரத்தில் இருக்கலாம்.ஆனால் மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் ஆட்சி, இறுதியில் மக்களிடமே தீர்ப்பு வாங்கும் அந்த தீர்ப்பு, தேர்தல் நாளில் வெளிப்படும் என்பதே இன்று தமிழகத்தின் பொதுமனநிலை.
