24 special

1000 கோடி ஊழல் விவகாரம்! உத்தரவு பிறப்பித்த அரசு! முடிந்தது கதை அமைச்சர் கைதா? ஒரே இரவில் தலைகீழ் திருப்பம்

KNNEHRU,INBADURAI
KNNEHRU,INBADURAI

தற்போது தமிழகத்தை சுழன்று அடிக்க போகும் அரசியல் கைது விரைவில் நடைபெறலாம் என  டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளது இதில் கோபாலபுரம் வரை புயல் வீசக்கூடும் எனவும் தகவல்கள் வெளிவருகிறது  சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்  ₹1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களை வைத்து ஊழலை உறுதிப்படுத்தியது அமலாக்கத்துறை 


மேலும் கே.என்.நேரு மீது  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்க அது வழிவகுக்கும் என்று அதன் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் வழங்கல் துறையில் பெரும் மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளது. .  

அதில் நகராட்சி நிர்வாக  துறையின் பணிகளை ஒதுக்குவதில்  7.5% முதல் 10% வரை அமைச்சர் கே.என்.நேருவின் கூட்டாளிகளுக்கு லஞ்சமாக செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  நகராட்சி நிர்வாக ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 'கட்சி நிதி' என்ற பெயரிலும் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சர் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், மொத்தம் ₹1,020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான "நேரடி ஆதாரம்" என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கழிப்பறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், நபாட் திட்டங்கள், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரி வேலைகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சங்கள்வசூலிக்கப்பட்டுள்ளது. லஞ்சப் பணம் பின்னர் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஹவாலா வலையமைப்புகள் மூலம்  மாற்றப்பட்டுள்ளது.  

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அதிமுக எம்.பி. இன்பதுரை, அமைச்சர் நேருவுக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த டிசம்பர் 13 அன்று லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு (DVAC) அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும், மாநில அரசு அல்லது DVAC வழக்கு பதிவு செய்யத் தயங்குவதால் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தான் தமிழக அரசு, அமலாக்க இயக்குநரகம் (ED) எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவை சார்ந்ததாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் மற்றும் ஒரு துறையில் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சில ஆவணங்களை அமலாக்க இயக்குநரகம் இணைத்துள்ளது. இதன் மூலம் விரைவில் கண்டிப்பாக அமைச்சர் கைதாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.  அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.