24 special

உலகுக்கே தலைப்பு செய்தி! அமெரிக்கா தலையில் இடியை இறக்கும் பிரிக்ஸ்! ரூட்டை மாற்றி இந்தியா போட்ட பிளான்.! டாலருக்கு ஆப்பு!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

தற்போது இந்தியா அமெரிக்க தான் உலகத்தின்  தலைப்பு செய்தி ஆகும். உலக வல்லரசு என கூறி கொள்ளும் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்காவை நட்பு நாடக ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் துருக்கி உள்ளிட்ட நாடுகள் தான் அமெரிக்கவுக்கு ஆதரவு அளித்து வருகிறது.  இந்த நிலையில் தான் உலகில் எந்த நாடுகளுக்கும் போடாத வரியினை இந்தியாவிற்கு விதித்துள்ளது அமெரிக்கா இதற்கு உலகம் முழுதும் எதிர்ப்பலைகள் கிளப்பியுள்ளது. அமெரிக்கா இந்த அளவிற்கு ஆட்ட்டம் போட காரணம் டாலர் தான். டாலர் மூலம் உலக நாடுகள் வர்த்தகம் செய்வதால் தான் அமெரிக்கா பிழைப்பு நடத்தி வருகிறது. 


ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையில், தங்களது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்கிறது. உலக அளவில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் வர்ததகம் செய்கின்றன. உதாரணமாக நாம் ரஷ்யாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறோம் எனில், அதற்காக அமெரிக்க டாலரை கொடுப்பதில்லை. மாறாக இந்திய ரூபாயைதான் கொடுக்கிறோம்.இப்படி இந்தியாவின் ரூபாய் வர்த்தகத்தால் டாலர் மதிப்பு குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. டாலர் ஆதிக்கம் குறைந்தால், அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் மற்ற நாடுகளைப் பாதிக்கும் விதம் குறையும்.பிரிக்ஸ் நாடுகளின் மொத்த மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 40% ஆகும். அதேபோல உலக ஜிடிபியில் இது சுமார் 40% அளவுக்கு பங்களிப்பை செலுத்தி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. 

 பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவில் உள்ள தியான்ஜினுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் உறுப்பு நாடாக இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கடுமையான வரிவிதிப்பு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு மத்தியில் இந்தப் பயணம் வந்துள்ளது.இது அமெரிக்காவுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. 

இந்தியா மீது வரிவிதிப்புக்கு பிரேசில், ரஷ்யா ஆசிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க தொடங்கிவிட்டார்கள். வரி விதிப்பு குறித்து ரஸ்யா கூறுகையில் ரஷ்யாவின் கூட்டாளி நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரி விதிப்பு அந்த நாட்டின் இறையாண்மை மீதான நேரடி ஆக்கிரமிப்பு ஆகும். அவர்களின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சியாகவே இதனை பார்க்கிறோம். பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத் போன்ற ஒருமித்த எண்ணங்கள் கொண்ட நாடுகள் ஆதரவுடன் நாங்கள் இருப்பதால் வரி விதிப்பு, தடைகளால் இயற்கையான போக்கை தடுத்து நிறுத்த முடியாது. சட்ட விரோதமான ஒருதலைபட்சமான தடைகளை எதிர்த்து நிற்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது"  என கூறியுள்ளார்கள். 

இதற்கிடையே அஜித் தோவல் ரஷ்யா பயணம், பிரதமர் மோடி சீன பயணம் எல்லாம் ஒரு கணக்கை கொண்டு தான் நடக்கிறது. ஏனென்றால் இந்தியா பிரிக்ஸ் பக்கம் முழுமையாக திரும்பிவிட்டது, ஆசிய நாடுகளுடன் வணிகத்திலும், இதர பல விஷயங்களிலும் ஒன்றிணைய ஆசிய நாடுகளும் தயாராகிவிட்டார்கள்.  இதை ஒருங்கிணைக்க இந்தியர் முழு மூச்சோடு களம் இறங்கி உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க முடியும். குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி கரன்சியை உருவாக்க இந்தியா ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, அவர், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.