24 special

உலகை திரும்ப வைத்த இந்தியா! இதுதான் உலகுக்கே ஹெட்லைன்ஸ்! இந்தியாவின் அதிரடி மூவ்! ModiVsTrump

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா காய்களை நகர்த்தி வருகிறது.  அதன் ஒரு பகுதிதான் இந்தியா பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. இது மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக அமெரிக்காவுக்கு இது பெரும் இடியை இறக்கியது. டிரம்ப்க்கு இது பலத்த அடியை கொடுத்தது.  அதுமட்டுமில்லாமல்  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகின் நம்பகமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் பிரதமர் மோடி 75 சதவீத மதிப்பெண்களுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.இந்த பட்டியலில் 45 சதவீத மதிப்பெண்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.இது ஈகோவை கிளப்பியது. 


இதனை தொடர்ந்து  ஏற்கனவே 25 சதவீத வரி என இந்திய பொருட்களுக்கு விதித்தவர் மேலும் 25% என அறிவித்துவிட்டார். இந்த வரி அறிவிப்பால் அமெரிக்க மக்கள் தான் பெரும் படாதபாடுபடுவார்கள் இனி அங்கு அவற்றின் விலை அதிகரிக்கும் இது உணவு முதல் கார்கள் வரை எகிறும், நஷ்டம் அமெரிக்க மக்களுக்கே என்பதால் இது அமெரிக்காவுக்கே பின்னடைவினை தரும், இந்தியா மாற்றுவழிகளில் தன்னை நிறுத்தி கொள்ளும்

ட்ரம்பின் இந்த வரி விதிப்பு மிரட்டலுக்கு அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு உலக நாடுகள் தற்போது ரஷ்யாவினை நோக்கி செல்கின்றது, மலேஷிய பேரரசர் ரஷ்யாவில் இருக்கும் நேரம் இந்தியாவின் அஜித்தோவலும் ரஷ்யாவுக்கு சென்றிருக்கின்றார் உலகம் இப்போது ரஷ்ய பக்கம் சாய்கின்றது, புட்டீனுக்கு ஆதரவு பெருகுகின்றது, அதனால் அவர் உலக தலைவர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்தன்னை சந்திக்க வருவோரிடத்தில் "பணத்தை விட நட்பு வலிமையானது" என்ம் ரஷ்ய பழமொழியினை சொல்லி அவர் வரவேற்றுகொண்டிருக்கின்றார்

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் இப்பொழுது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் இப்பொழுது இருக்கிறார்.விரைவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசஇருக்கிறார் இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் ரஷ்யாவை உக்ரைனுடன் போரை நிறுத்த வேண்டும் என்றும்  அமெரிக்காவின்  அதிபர் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார் 

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என்று கூறியதோடு நிற்காமல் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து தனது அ ணுசக்தி வளர்ச்சிக்கு  யுரேனியம் ப்ளூ ட் டோனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மி ன்சார வாகனங்களுக்கான பல்லேடிய ம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் உள் ளிட்ட முக்கிய பொருட்களை ரஷ்யாவி லிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதை சுட்டிக்காட்டி அமெரிக்கா முத லில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி யை நிறுத்திவிட்டு அடுத்த நாட்டிற்கு புத்தி சொல்ல வாருங்கள் என்று ட்ரம்பிற்கு பாடம் எடுத்தது

இந்தியா முழு அளவில் ரஷ்யாவுடன் கை கோர்த்து  அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட ஆலோசனைகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ்  நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் $1 டிரில்லியனை கடந்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே பிரதமர் மோடி சீனா செல்லவுள்ளது டிரம்ப்க்கு இடியை இறக்கியுள்ளது.  ஏனெனில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையில், தங்களது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்கிறது. உலக அளவில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் வர்ததகம் செய்கின்றன ஆக சுற்றி வளைத்து பார்த்தால், பிரிக்ஸ் வர்த்தகம் நமக்கு நன்மையைதான் ஏற்படுத்தியுள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதான் BRICS நாடுகளின் நீண்டகால இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது

இவரை அடுத்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் ரஷ்யா செல்ல இருக்கிறார்.விரைவில் இந் தியா ட்ரம்பிற்கு மிகப்பெரிய பாடம் கற்பிக்க இருக்கிறது