
உலக அரங்கத்தில் இந்தியாவின் மதிப்பு தற்போது கூடி கொண்டே செல்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவிஏற்றதிலிருந்து வரி விதிப்பு, எல்லை பிரச்சனைகலில் தலையீடுவது என அட்ராசிட்டி செய்து வந்த டிரம்ப்க்கு இந்தியா ஆப்பு வைத்துள்ளது இந்தியா. உலக நாடுகளிடம் வம்பிழுத்த டிரம்ப் அப்போது எழாத பெரும் பரபரப்பு மோடியிடம் உரசியபின் எழுந்துள்ளது , டிரம்பர் செய்த 25% வரி என்பதையாவது அவர்கள் பொருளாதார கணக்கு வேறுவழியில் சரிகட்டலாம் என நிதானமாக இருந்த இந்தியாவினை கூடுதல் 25% அபராத வரி என டிரம்பர் சொன்னபோது இனி பொறுக்கமுடியாது என இந்தியா முடிவெடுத்துவிட்டது.
அதன்படி அமெரிக்காவுடன் செய்திருந்த சில கடல் கண்காணிப்பு விமானம் வாங்கும் முடிவை ஒத்திவைத்தது இது அமெரிக்காவுக்கு பெரிய அடி , இன்னும் பல அமெரிக்க வியாபார ஒப்பந்தங்களை இடைநிறுத்துவோம் என சொல்லிவிட்டது இந்தியாஇந்தியாவினை தொடர்ந்து ஏற்கனவே அமெரிக்கா மேல் கடுப்பான ஒவ்வொரு நாடும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடான கனடா அமெரிக்காவுடன் இனி கூட்டு ராணுவ தயாரிப்பு இல்லை எனகூறிவிட்டது இன்னொரு அண்டை நாடான பிரேசில் அதை தைரியமாக செய்கின்றது , பிரேசிலுக்கும் டிரம்பர் 50 சதவீத வரியினை விதித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், "உம்மிடம் பேச ஒன்றுமில்லை" என சொன்ன பிரேசில் அதிபர் மோடியுடனே தொலைபேசியில் விவாதித்தார் இனி பிரேசில் இந்தியா இணைந்து செயல்படும்
ஐரோப்பாவின் பல நாடுகள் இனி அமெரிக்காவினை நம்பமுடியாது என இந்தியா நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ரஷ்யாவில் பபுடினை சந்தித்து பெரும் ஆலோசனை நடத்தியிருக்கின்றார்
அப்பக்கம் சீனா இரு கையினை விரித்தபோடி மோடியினை வரவேற்க காத்திருக்கின்றது. அரபு நாடுகள் கச்சா எண்ணெய் வழங்க தயராகி விட்டார்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒரு நாடும் பேசவில்லை ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை தர உள்ளார் என அமெரிக்காவுக்கு இடியை இறக்கி வருகிறது இந்தியா. இதனால் அமெரிக்கா உள் நாட்டிலும் பிரச்னை எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவை பகைத்து கொண்டு ட்ரம்ப் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் சுண்டுவிரலுக்கு உலகம் ஆடும் என நினைத்தார் ஆனால் ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை , ஈரான் தாக்குதலை கூட இஸ்ரேல் செய்தபின்பே அமெரிக்கா செய்து தானும் களத்தில் உண்டு என காட்டி கொண்டது, நேதன்யாகுடிரம்ப்பை ஒரு பொருட்டாக மதிக்கவில்லைஅதையே கனடா மெக்ஸிகோ சீனா என எல்லா நாடுகளும் செய்தன, வடகொரியா அடிக்கடி செய்தது ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்க அதிபரை ஒரு தலைவராக அல்ல கத்திதீர்க்கும் மனிதனாக கூட மதிக்கவில்லை, இந்நிலையில் இந்தியாவின் எழுச்சியும் அதன் அதிக பலமும் அவரை அச்சுறுத்தின அங்கு வந்து தன் ஆளுமையினை நிருபிக்கபார்த்தார் அவரின் முகத்தில் அடித்து விரட்டிவிட்டது இந்தியா.
அந்த வெறுப்பில் அவர் என்னமோ செய்துகொண்டிருக்கின்றார் உண்மையில் இந்தியாமேல் 50 சத வரி என்பது விஷயமே அல்ல, உலகில் அப்படி எத்தனையோ குட்டி நாடுகள் உண்டு, அவர்கள் மிக எளிதாக இந்தியாவுக்கு கைகொடுப்பார்கள் மோடி உலக நாடுகளுக்கெலாம் குட்டி நாடுகளுக்கெல்லாம் காரணமில்லாமல் செல்லவில்லை ஒவ்வொன்றிலும் தொலைநோக்கு இருந்தது அது இனி கைகொடுக்கும்நிச்சயம் அடிவாங்க போவது அமெரிக்காதான், மோடி திருப்பி அடிக்க ஆரம்பித்தபின் உலகம் மோடி பின்னால் அணி திரள்கின்றதுஇன்னும் சில நாட்களில் பல நாடுகள் ஒன்றுகூடி அமெரிக்கா மேல் பொருளாதார தடைகளை விதிக்கவும் வாய்ப்பு உண்டு, ட்ரம்ப் அந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையினை பெற்றே தீருவார்.