Tamilnadu

நேரலையில் சொல்லிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு பதறிய ஹாஜாக்கனி? எல்லாம் பாஜக படுத்தும் பாடு நெட்டிசன்கள் கிண்டல் !!

Private
Private

தனியார் தமிழக செய்தி ஊடகம் ஒன்றில் நேற்றைய தினம் (08/09/21) தமிழக சட்டமன்றத்தில் திமுக கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது, விவாதத்தில் திமுக சார்பில் கான்ஸ்டாண்டைன், தமுமுக சார்பில் ஹாஜாக்கனி, அரசியல் விமர்சகர்கள் ரவீந்திரன் துரைசாமி, பி ஆர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்றபோது சட்டத்தை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை என பாஜக தரப்பில் கூறுகிறார்கள் மேலும் தீர்மானம் கொண்டுவந்தால் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறும்போது  திமுக தீர்மானம் நிறைவேற்றி எந்த பயனும் இல்லை என பங்கேற்ற விருந்தினர்களில் ஒருவர் கேள்வி எழுப்ப ஹாஜாக்கனி அந்த கேள்விக்கு பதில் அளித்தார்.

விவாதத்தில் பேசியவர் ஒன்றிய அரசு தொடர்ந்து இஸ்லாம் மக்களை பரபட்சத்துடன் நடத்துவதாகவும், இன்றைக்கு CAA வால் பாதிப்பு இல்லை என கூறிவிட்டு நாளை NRC மூலம் இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அரசு மறைமுக நெருக்கடி கொடுக்கும் எனவும் தெரிவித்தார், இதற்கிடையில் திமுக கொண்டுவந்த தீர்மானம் நாங்கள் இஸ்லாமியர்களுடன் இருக்கிறோம் எனவும் தமிழக மக்களின் மன நிலையை பிரதிபளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் என சொன்னார்கள் இப்போது பேரவையில் நடக்கும் சம்பவங்கள் மக்களுக்கு திமுக யார் என்பதை நிறுத்திவிட்டதாகவும் திமுக விசுவாசியாகவே மாறி பேசினார் ஹாஜாக்கனி, எப்போது மத்திய அரசிற்கு திமுக அடிபணியாது என குறிப்பிட்டவர் மன்னிக்கவும் மன்னிக்கவும் மத்திய அரசு இல்லை ஒன்றிய அரசு என பேசினார்.

அவர் மத்திய அரசு என கூறிவிட்டு மன்னிப்பு கேட்டு ஒன்றிய அரசு என கூறியது நெறியாளர் உட்பட பலரையும் நகைப்பிற்கு கொண்டு சென்றது, கடந்த 4 மாதம் வரை மத்திய அரசு என பல விவாதங்களில் பேசிவந்தவர் ஹாஜாக்கனி அப்படியிருக்கையில் திமுக என்ன வார்த்தை பயன்படுத்துகிறதோ அதே வார்த்தையை அவரும் பயன்படுத்த நினைத்து இறுதியில் பழைய நினைவில் மத்திய அரசு என கூறிவிட்டார்.

இந்த வீடியோ காட்சியை கட் செய்து இணையத்தில் எல்லாம் பாஜகவும் மோடியும் படுத்தும் பாடு  இன்னும் எப்படியெல்லாம் இவர்கள் மன்னிப்பு கேட்க இருக்கிறார்களோ என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கிண்டல் அடித்து வருகின்றனர், சரி மத்திய அரசு இல்லை ஒன்றிய அரசு என்றால் இதற்கு முன்னர் மத்திய அரசு என பேசியது தவறா இல்லை திமுக என்ன சொல்கிறதோ அதுதான் தமுமுகவிற்கும் வேத வாக்கா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.