24 special

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கம் – கணக்குகள் Logout ஆனதால் பயனர்கள் தவிப்பு... வெளிவரும் பகீர் உண்மைகள்....

instagram, facebook
instagram, facebook

 தற்போதைய நிலைமையில் செல்போன் என்ற ஒன்று அனைவருக்கும் தேவையான ஒன்றாகவே உள்ளது. இன்றைய உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் கேஜெட்களில் மொபைல் போன்களும் ஒன்று. அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அவை உண்மையில் மிகவும் பயனுள்ளவை மற்றும் பல வழிகளில் நமக்கு உதவுகின்றன, மேலும் அவை நம் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் ஆக்குகின்றன. உதாரணமாக தொலைவில் உள்ள உறவுகளிடம் நினைத்த நேரத்தில் பேச முடிகிறது, மேலும் வீடியோ கால் மூலம்  முகத்துக்கு முகம் பார்க்கவும் முடிகிறது. மேலும் தற்போது உள்ள நிலையில் பெரும்பாலானோர்  கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் வங்கி கணக்கில் உள்ள பணத்தினை phonepe, Gpay மூலம் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.


இந்த நிலையில் facebook, Instagram போன்ற சமூக வலைத்தளங்கள் அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. சோசியல் மீடியாக்கள் இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாத நபர்களும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். இவை இரண்டும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல வசதிகளை கொண்டுள்ளது உதாரணமாக புகைப்படங்களை அனுப்புவது வீடியோக்களை பகிர்வது அனைவரிடமும் பேசுவது போன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கியுள்ள இந்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது, இந்த இரண்டிலும் அக்கௌன்ட் வைத்து இல்லாத யாரையும் இந்த காலத்தில் பார்ப்பது அரிதாகவே உள்ளது. அந்த அளவுக்கு பெரும்பாலான மக்கள் இந்த சோசியல் மீடியாவை பயன்படுத்தி அதற்கு அடிக்ட் ஆகும் நிலையில் கூட உள்ளனர். இப்படி ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் ஒரு பக்கம் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது மட்டுமல்லாமல் தொழில் செய்பவர்களுக்கும் பெருமளவில் பயன்பெற்று வருகிறது.

உதாரணமாக ஏதாவது துணி வியாபாரம் செய்பவர்கள் அவர்களின் instagram ஃபேஸ்புக் அக்கவுண்டுகளில் இதற்கென தனியாக அக்கவுண்ட் துவக்கம் செய்து அதன் மூலம் தங்கள் வியாபாரத்தினை பெருக்கவும் செய்கின்றனர்.  இந்த நிலையில் நேற்று இரவு மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் இரண்டும் பயனர்களால் பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளன. இதை பயன்படுத்த முடியாத நிலையில் அனைத்து பயனர்களும் அதிர்ச்சியான நிலையில் தள்ளப்பட்டனர். ஏன் இந்த இரண்டு சமூக வலைத்தளங்களும் பயன்படுத்த முடியவில்லை என்ற காரணம் அனைவரின் மத்தியிலும் தோன்றியுள்ளது.  இதனால் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.இதன் காரணம் என்னவென்று பார்த்தால்,  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இணையதள செயலிகள் தற்காலிகமாக செயலிலந்துள்ளது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள செயலி செயலிழந்துள்ளது.

இதனால் லாக்-இன் செய்ய முடியாமல் உலகெங்கிலும் பயனர்கள் அவதியடைந்துள்ளர். விரைவில் சரிசெய்யப்படும் என மெட்டா நிறுவனம் சார்பில்  அதன் பயனர்களுக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பயனாளர்களால் பேஸ்புக் மட்டுமே இன்ஸ்டாகிராமை உபயோகப்படுத்த முடிந்தது.இதன் பின்னணியை விசாரிக்கும்போது டெக்கனிகள் காரணம் சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் வேறு ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது பேஸ்புக் பதிவுகளில் இனி ஆபாச, வக்கிர, வன்முறை விடீயோக்களை பதிவிட முடியாது எனவும், அதன்காரணமாக பேஸ்புக் தனியாக ஒரு பயிற்சியை மேற்கொண்டது எனவும் வேறு கூறப்படுகிறது, இனி முகநூல் பக்கத்தில் இருந்து அதுபோன்ற வீடியோக்கள் பார்த்தால் உங்கள் கணக்கு முகக்கப்பட வாய்ப்பிருக்கிறது, அதன் காரணமாகவே இந்த சோதனை என்கின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.