24 special

எவ வேலு மேட்டர்ல பேரு லீக்கான மேடம் இப்போ என்ன பண்றங்க தெரியுமா?

eva velu,incometaxoffice
eva velu,incometaxoffice

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் திமுக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக விளங்கி வருகின்ற பொதுப்பணித்துறை அமைச்சரான எவ வேலுவிற்கு சொந்தமான 80திற்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினார். இந்த பரபரப்பான செய்தி வெளியாவதற்கு முன்பாகவே திமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதும் அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டதும் திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. 


அந்த சமயத்தில் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள்  சோதனையை தொடங்கியது வேறு திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு அமைச்சர் வேலு தரப்பையும் கலக்கத்தில் ஆழ்த்தியது! மேலும் அமைச்சர் எவ வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருக்கின்ற அதே சமயத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளராக இருந்த மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும் ஆவார்! 

முன்னதாக தொழிலதிபர் மீனா ஜெயக்குமார் அமைச்சர் எவ வேலுவின் பினாமி என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை மறுக்கும் விதமான தகவல்களை மீனா ஜெயக்குமார் கூறிவந்த நிலையில் தான் அமைச்சர் வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது அதே சமயத்தில் தொழிலதிபர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனையில் இறங்கியது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்த காரணமாக அமைந்தது. 

மேலும் மீனா ஜெயக்குமாரின் கணவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், அதனால் மீனா ஜெயக்குமார் மற்றும் அவரது கணவர் சம்பந்தப்பட்ட இடங்களான சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அப்பாசாமி குடியிருப்பில் சிஇஓ கிருஷ்ணன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது மேலும் அந்த நிறுவனத்தின் அடையாறு தலைமை அலுவலகம் நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனையில் இறங்கினர். 

அதுமட்டுமின்றி கடந்த உள்ளாட்சி தேர்தலின் பொழுது மேயர் வேட்பாளரின் பட்டியலில் மீனா ஜெயக்குமாரின் பெயரும் இடம் பெற்றதாகவும் ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு தெரிந்த ஒருவரை தேர்ந்தெடுத்ததால் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து தூக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படி அமைச்சர் வேலு மற்றும் திமுக நிர்வாகியான மீனா ஜெயக்குமார் இருவரும் தொடர்புடைய செய்திகள் அனைத்தும் பரபரப்பாக வெளியானதால் வேலுவின் பினாமியாக மீனா ஜெயக்குமார் இருக்கலாம் என்று கோணத்திலே வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. 

இந்த தகவலை அடுத்து மீனா ஜெயக்குமாரும் அமைச்சர் வேலுவும் இதனை மறுத்து வந்தனர் அதற்குப் பிறகு மீனா ஜெயக்குமார் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் பொது வெளியில் தலை காட்டாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். 

இந்த நிலையில் தற்பொழுது ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மீனா ஜெயக்குமார், அதில் சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவன் ரித்தீஷ் விநாயக் அவர்களுக்கு விபத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரித்தீஷ் விநாயக் அவர்களின் பெற்றோர் அன்பு சகோதரர் வசந்த் குமார் கோவைபுதூர் அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். பின் வசந்த் குமார் கோவைபுதூர் அவர்கள் ஆலம் விழுதுகள் பவுண்டேஷனை அணுகி அவர்களின் நிலைமையை எடுத்துரைத்தார். ஆலம் விழுதுகள் நிறுவனர், திருமதி.மீனா ஜெயக்குமார் அவர்களின் பிறந்தநாள் அன்று மாணவனின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு சக்கர நாற்காலியை வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து உதவி என்பது நம் வாழ்க்கையில் நாம் அனைவரும் ஒவ்வொரு விதமாக செய்து கொண்டு தான் இருக்கிறோம் இனியும் செய்வோம் என்று தானே பேசிய ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் மீனா ஜெயக்குமார்! பல மாதங்களாக சமூக வலைதளம் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்த மீனா ஜெயக்குமார் தற்போது உதவி செய்வது போன்ற பதிவை போட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.