Cinema

கருணாநிதி நினைவிடத்தை புகழ்ந்து தள்ளிய வடிவேலு... சீண்டி வரும் நெட்டிசன்கள்..!

Vadivelu, Rjinikanth
Vadivelu, Rjinikanth

சமீபத்தில தினமும் வடிவேலு மீது தொடர் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. செய்திகளில் வடிவேலு பெயர் இல்லாமல் கடந்து செல்வதும் இல்லை. அந்த வகையில் தற்போது தனது வாயை கொடுத்து வாங்கி கொண்டார் என்பது போல் வடிவேலு சிக்கிக்கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் பல கோடி செலவில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.


அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும் உடல்நிலையை காரணம் காட்டி இருந்தார். அதன் பிறகு படப்பிடிப்பில் ஆற்வம் காட்டிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அரசியல் சார்ந்த விஷயத்தில் முதல் ஆளாக பங்கேற்று வருகிறார். கலைஞர் 100 விழா, கலைஞர் நினைவு மண்டபம் போன்றவைகளில் கலந்து கொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற கலைஞர் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியது பேசு பொருளான சூழ்நிலையாக மாறியது.

அதாவது, இது கலைஞர் நினைவு மண்டபம் இல்லை கலைஞரின் தாஜ்மஹால் என புகழ்ந்து பேசினார். முத்தாக அதிமுக நிர்வாகி சசிகலா வீட்டிற்கு சென்று அங்கு இது வீடு இல்லை கோவில் என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு நடிகர் வடிவேல் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற நிலையில், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பேசியது வைரலாகி வருகிறது. இது சமாதி இல்லை சன்னதி என்றும் திமுகவினருக்கு இதுதான் குலதெய்வ கோயில் என்றும் கூறினார் வடிவேலு. கருணாநிதி ஐயா அருகிலேயே அமர்ந்து பேசுவது போன்ற வீடியோ அமைப்புகள் வேறலெவலில் மெய் சிலிர்க்க வைத்து விட்டதாக கூறியுள்ளார்.

அனைவரும் வந்து பாருங்க, ஃப்ரீ தான் என பேசிய வடிவேலு, இந்த இடத்துக்கு வந்தது என் பாக்கியமாக கருதுகிறேன். திமுக எனும் பிரம்மாண்ட கோட்டையை கட்டியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இப்படியொரு இடத்தை கட்டியமைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசியுள்ளார். திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஒவொன்றிலும் வடிவேலு கலந்து கொள்ளவார். இவரின் பேச்சுஇணையத்தில் வைரலாக ஒரே கேள்வியை தொடர்ந்து நெட்டிசன்ங்கள் எழுப்பி வருகின்றனர்.

அதாவது, சினிமாவில் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் வடிவேலுவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அப்படி பட்ட மனிதனின் மறைவுக்கு செல்லாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் மதுரையில் இருந்து சென்னை வந்தவுடன் கலைஞர் நினைவிடத்தை பார்த்தீர்கள். ஏன் விஜயகாந்த் இடத்திற்கு செல்லவில்லை என நெட்டிசன்கள் கேள்வியை அடுக்கி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.