24 special

திமுக கூட்டணி கட்சிகளின் முடிவென்ன..? அடுத்ததடுத்து வெடிக்கும் பூகம்பம்

EPS, Thirumavalavan, Stalin
EPS, Thirumavalavan, Stalin

நாடளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் கூட்டணி விவகாரத்தில் தீயாக வேலை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலைமையில் தேர்தலை களம் காணவுள்ளது. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசிக ஆரம்பத்தில் இருந்து 3 தொகுதிகளை வாங்குவதில் குறியாக இருந்து வருகிறது. திமுக அதனை கொடுக்காமல் இருக்கும் காரணம் குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், முஸ்லீம் கட்சிகளுக்கு பேச்சுவார்த்தை நடந்து முடிந்து அவர்களுக்கான ஒதுக்கிய தொகுதிகள் தொடர்பாக கையெழுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் உள்ள முக்கிய கட்சியான விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தொடர் இழுபறி நடந்து வருகிறது. காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், திருமாவளவன் தனது கட்சிக்கு மூன்று தொகுதி வேண்டும் என்பதில் சமரசம் இல்லாமல் இருந்து வருகிறாராம்.

ஒரு பக்கம் திருமாவளவன் அதிமுக பக்கம் சென்றுவிடுவார் என்பதில் குறியாக இருக்கிறார் என்பது போல செய்திகள் வெளியானது. இதற்கு பதிலளித்த திருமாவளவன் ஊகங்கள் அடிப்படையில் வருவதை கண்டிக்கிறேன் என்று பதிலளித்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது. அது விசிகவுக்கும் சேர்த்து விடப்பட்ட அழைப்புதான் என்று தகவல் பரவி வருகிறது. விசிகவையும், காங்கிரஸும் இழுபறி செய்யவைத்து என் என்பது குறித்து அரசியல் விமர்சககர் சவுக்கு சங்கர் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

திமுக தனது உதயசூரியன் சின்னம் மூலம் 25 இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை போல இந்த முறையும் சீட்டு கொடுப்பதாக நினைக்கிறதாம். அதன் காரணமாகவே, விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சசுமுக உடன்பாடு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. விசிக கடந்த முறை போன்று இரண்டு தொகுதிகள் கேட்டால் கொடுத்திவிடலாம் என நினைத்த திமுக, இந்த முறை மூன்று தொகுதி வேண்டும் என்று ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கிறார். மூன்றும் ததங்களது பானை சின்னத்தில் போட்டியிடுவதாக விரும்புகிறார் அதன் காரணமாகவே இழுபறி நடப்பதாக தெரிவித்தார்.
.
சமீபத்தில் விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜுன்  ஒரு பொது தொகுதியில் நிற்க இருப்பதாக கூறப்படுகிறது. அங்கும் பானை சின்னத்தில் தான் நிற்கவேண்டும் என திருமவளவனிடம் கேட்டு வருகிறாராம். மூன்று தொகுதிகளில் ரவிக்குமார், திருமாவளவன் ஆதவ் அர்ஜுன் போட்டியிடவுள்ளனர். இந்த முறை மூன்று என்பதில் உறுதியாக இருக்கும் திருமாவளவன் ஓகே என்று சொன்னாலே மட்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். இல்லையென்றால் மற்ற சமரச பேச்சுக்கே இடமில்லை என கூறிவிட்டாராம் திருமாவளவன்.

அதிமுக கட்சி நீங்கள் கேட்கும் தொகுதி நாங்கள் கொடுக்க ரெடி எப்படியாவது திமுகவில் இருந்து கூட்டணியை அதிமுக பக்கம் கொண்டுவர திட்டம் போட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு வேலை விசிக இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சி தமது பக்கம் கொண்டுவரவும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஷ் கேட்கும் தொகுதியில் திமுக அடிபனைவது போல் தெரியவில்லை. வரும் நாட்களில் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பது தெரியவரும்.