Tamilnadu

கைதில் இருந்து தப்பிக்க மலையில் தஞ்சம் புகுந்தாரா வன்னியரசு ? தமிழக காவல்துறை என்ன செய்ய போகிறது?

vanniyarasu
vanniyarasu

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மீது காவல் ஆணையர் அலுவலகம், அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், இன்னும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யபட்டு வருகின்றன.


பாரத பிரதமர் மோடியை கொலைகாரன் என விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் 2000 இஸ்லாமியர்களை கொன்றார் என ஊடகம் ஒன்றில்  நேரடி விவாத நிகழ்ச்சியின் போது பேசினார் வன்னியரசு, பாஜகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர், தொடர்ந்து பிரதமரை இழிவுபடுத்தும் விதமாக வன்னியரசு செயல்படுவதாகவும், உண்மைக்கு மாறாக முற்றிலும் பொய் செய்தியை சொன்னது உடன் அது குறித்து எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பதாக புகார் அளித்தனர்.

பிரதமர் குறித்து தொடர்ந்து திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர், முன்னர் தமிழக காவல்துறையை சாதிவெறியர்களின் கூடாரம் என வன்னியரசு விமர்சனம் செய்தார் அத்துடன் விடுதலை சிறுத்தைகளின் பழைய கால நினைவுகள் என்னை தற்போதுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை எனவும் மிரட்டும் தொனியில் பேசினார்.

இதுபோன்று சமீபத்தில் வன்னியரசு மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன, பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்த காவல் துறையால் விசிக பிரமுகர் வன்னியரசு கைது செய்ய முடியவில்லை எனவும் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன, கூட்டணி கட்சியினருக்கு ஒரு மாதிரியாகவும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களே ஒரு மாதிரியாகவும் அணுகுவதாக தமிழக காவல்துறை மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த சூழலில்தான் வன்னியரசு கைது செய்ய தமிழக காவல்துறை திட்டமிட்டு இருப்பதாகவும் நள்ளிரவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் பரவியது, ஆனால் அவர் வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லை என்றும் எங்கோ அவர் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் கவந்த வண்ணம் இருந்த சூழலில் தற்போது அவர் மலைப்பிரதேசம் ஒன்றில் இருந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தர்மபுரியில் இருந்து 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வத்தல் மலையில் என்னும் இடத்தில் இருப்பதாகவும் அங்கிருந்து உச்சி மலையின் மேல் ஏழு கிலோ மீட்டர் தள்ளி தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் வன்னியரசு. தமிழக காவல்துறை வன்னியரசு தேடி வருவதால் அவர் தலைமறைவாக இருக்கலாம் என சமூக ஊடகங்களில் சில செய்திகள் பரவிய நிலையில் தான் எங்கும் தப்பி செல்லவில்லை மலைப்பிரதேசத்தில் இருப்பதைப் போன்று வீடியோவை வெளியிட்டு தன்னுடைய இருப்பை நிலை காட்டியுள்ளார் வன்னியரசு.

 இதற்கிடையே நெட்டிசன்கள் பலரும் வன்னியரசு கேள்வி எழுப்பி வருகின்றனர் தற்போது மலை பகுதிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன அதுவும் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் கூடிய மலை பகுதிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன எனவும் வன்னியரசு சிலர் கேள்வி எழுப்புகின்றனர், ஒருவேளை நகர் பகுதிகளிலோ அல்லது குக்கிராமங்களிலும் இருந்தால் காவல்துறை தன்னை கைது செய்ய வரும் என்ற பயத்தினால் மலைப்பகுதிக்கு சென்று தன்னை காத்துக் கொண்டுள்ளாரா வன்னியரசு எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து பிரதமர், தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசி வந்த வன்னியரசு தற்போது வரை கைது செய்யாமல் இருப்பது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது என பாஜகவினர் குற்றம் சுமத்தும் நிலை காவல்துறைக்கு உருவாகியிருக்கிறது