மத்தியில் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளின் பல்வேறு வியூகங்களுக்கு சாமர்த்தியமாக அரசை கொண்டு செல்கிறது என்றால் அதற்கெல்லாம் காரணம், மக்களின் நலனில் அக்கறை காட்டுவதே. அதன் காரணமாக தான் நாட்டின் வளர்ச்சியில் அதி முக்கியத்துவம் கொடுக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்.. முடிவே இல்லாமல் பல ஆண்டுகளாக பெரும் சிக்கலில் இருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுமூக தீர்வு கண்டது முதல் ஒரே நாடு ஒரே பதிவு என்பது வரை நாட்டின் ஒற்றுமையையும், ஊழல் இல்லாத ஆட்சியையும் செய்து வருகிறது.
ஆனால் இதற்கெல்லாம் இடைஞ்சலாக எதிர்க்கட்சிகள் பல சூட்சமங்கள் செய்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை டூல்கிட் மூலம் சமூக வலைதளத்தில் பரப்பினாலும், படித்த இளைஞர்கள் இளம் தலைமுறையினர் மற்றும் இந்திய அரசியலை உற்று நோக்கும் சமுக ஆர்வலர்கள் என அனைவரும் பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் வரவேற்பு கொடுக்கின்றனர்.
அந்த வகையில் தாங்கள், பல்வேறு வேலைகளுக்கு இடையே, தூங்க கூட நேரம் கிடைக்காவிட்டாலும் சில நிமிடங்கள் ஒதுக்கி சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட தொடங்கி உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது, அதுவும் குறிப்பாக தமிழகத்தில் ஊடகங்கள் செயல்படும் விதம் முதற்கொண்டு, உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தை எடுத்து வைக்கும் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கத்தை பதிவை இட்டு வருகின்றனர்.
உதாரணத்திற்கு.... முகநூல் பக்கத்தில் பாலகிருஷ்ணன் என்பவரின் பதிவு..... அதில், இடதுசாரி ஊடகங்கள்தான் இந்தியாவில் பிரச்சினைக்கு தூபம் போடுகிறது .
இடதுசாரிகளால் கடந்த இருபது வருடங்களில் மூடப்பட்ட ஆலைகள் அதிகம் இடதுசாரிகள் தான் வேலையில்லா பிரச்சனைக்கு முக்கிய காரணம் இடதுசாரிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் தொழிற்சாலைகள் குறைவு ..எ.கா கேரளா இந்தியாவில் இடதுசாரி கொள்கை என்று இல்லாமல் போகிறதோ அன்று இந்தியா பிரச்சினை இல்லாத நாடாக அமையும்.
- இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது.