Tamilnadu

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக அண்ணாமலை !

annamalai
annamalai

கோவில் நகைகளை உருக்கி வங்கியில் அடமானம் வைத்து அதன் மூலம் வரும் வரி வருவாயை மற்ற கோவில்களுக்கு பயன்படுத்த போவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, கோவில் நகை என்பது குறிப்பிட்ட கோவிலின் சொத்து அதனை அதே கோவிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் நகையை அளித்தவர் குறிப்பிட்ட கோவிலுக்கு மட்டுமே அளித்து இருக்கிறார் என பாஜக கூறியது.


தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதையே வலியுறுத்தினார்.இந்நிலையில் பாஜகவின் முயற்சிக்கு முதல் வெற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி தெரிவித்த கருத்து பின்வருமாறு :- தமிழக அரசின் இன்றைய செய்தி குறிப்பு

"இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டி தொகை அந்தந்த கோயில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும், அந்தந்த திருக்கோவில்களில் இறைவன், இறைவி திருவுருவங்களுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக்கட்டிகள் திரும்ப பெறப்பட்டு பயன்படுத்தப்படும்"

இதுவே இந்த செய்தியின் முக்கிய அம்சம். இதை தான் தொடர்ந்து பல நாட்களாக வலியுறுத்தி வந்தேன். ஆனால், தமிழக அரசு மற்றும் அமைச்சர் சேகர் பாபு அவர்கள் இது வரை கூறி வந்தது "கோவில்களில் உள்ள தங்க நகைகள் உருக்கப்பட்டு, அவைகளை வங்கிகளில் முதலீடு செய்து, அதன் மூலம் பெறப்படும் வட்டி தொகையை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நலிவடைந்த கோவில்களின் திருப்பணிகளுக்கு பயன்படுத்த போகிறோம்" என்பதே. ஆனால், இன்றைய செய்தி குறிப்பில் அவை இடம் பெறவில்லை.

அந்தந்த 'கோவில்களின் சொத்துக்கு உரிமையாளர் அந்தந்த கோவில்களில் உள்ள இறைவனே' என்பது சட்டம். ஒட்டு மொத்தமாக எல்லா கோவில்களிலிருந்தும் தங்கத்தை உருக்கி, மொத்தமாக முதலீடு செய்வதற்கான அதிகாரம் அரசுக்கு  இல்லை என்றும், அந்தந்த கோவில்கள் தான் சொத்துக்களை கையாள வேண்டுமே தவிர அறநிலைய துறை அல்ல என்பதுமே நமது வாதமாக இருந்தது. அதனடிப்படியிலேயே இன்றைய அரசு செய்தி குறிப்பு வெளிவந்துள்ளது என எண்ணுகிறேன். இது குறித்து பல்வேறு மேற்கோள்களையும், சட்டங்களையும் நாம் சுட்டி காட்டிய நிலையில்,

இந்த மனமாற்றத்திற்கு காரணம் தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் தலைமையில் தமிழக பாஜக முன்னெடுத்த கடும் ஆட்சேபணையும், தொடர் போராட்டமும்  தான் என்பது தெளிவாகிறது. அரசு மனம் மாறியிருந்தால் மகிழ்ச்சி. இந்த செய்தி குறிப்பு நம் சந்தேகங்களை, நம் கோரிக்கைகளை தெளிவாக்குகிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டினை மனமார வரவேற்கிறோம்.

நம் கோரிக்கையினை ஏற்று உரிய நேரத்தில் விளக்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக ஹிந்து அறநிலைய துறை அமைச்சருக்கும் நன்றி. திருக்கோவில்களின் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நியாயமான, சட்ட ரீதியான முயற்சிகளுக்கு பாஜக என்றைக்கும் ஒத்துழைப்பை நல்கும் என நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கோவில் நகைகளை உருக்குதல் கோவில்களை வாரத்தின் அனைத்து நாட்களும் திறக்கவேண்டும் என போராட்டம் நடத்தியது இதில் பாஜகவின் முதல் வெற்றி பதிவான நிலையில், கோவில்களை நிச்சயம் அனைத்து நாட்களும் திறக்கவேண்டும் என பாஜகவின் மற்றொரு வலியுறுத்தல் நிச்சயம் நிறைவேறும் பொறுத்து இருந்து பாருங்கள் என பாஜகவினர் குறிப்பிட்டு வருகின்றனர்.