Cinema

என்னையா அட்லீ படத்துக்கா இப்படி....?

Atlee
Atlee

பல முன்னணி இயக்குனர்களின் மத்தியில் ஒரு பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் அட்லீ!! இவர் இந்திய திரைப்படங்களை இயக்குவதில் மட்டுமல்லாமல், பேய் கதையின் எழுத்தாளராகவும் மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் தனது பணியினை தொடர்ந்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் எந்திரன் மற்றும் நண்பன் போன்ற திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குனர் சங்கரின் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் இயக்குனராக திரைப்பட உலகில் அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குனர் என்ற பட்சத்தில் விஜய் விருதினை பெற்றார்.


மேலும் தமிழ்நாடு மாநில அரசு விருதுநையும்  வாங்கினார். பல முன்னணி இயக்குனர்கள் மத்தியில் மிகவும் குறுகிய காலத்தில் ஒரு டாப் இயக்குனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!!தனது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் ஆன ராஜா ராணி என்ற திரைப்படத்திலேயே அதிக அளவில் வெற்றியை கண்ட அட்லி அதன் பிறகு தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி அவை அனைத்தும் திரையில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பையும் பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி அதை திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸையும் நிறைந்து அதிக அளவில் ரசிகர்களை பெற்றது. 

இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆஸ்கருக்கு இணையான விருது ஒன்றிற்கு தேர்வாகியுள்ளது!! இது குறித்து விரிவாக காணலாம்!!ஜவான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பிற்கு பிறகு திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து அதிக அளவில் ரசிகர்களையும் பெற்று வந்தது. மேலும் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் நிறைந்து வழிந்தது. இதனைத் தொடர்ந்து ஜவான் திரைப்படத்தின் வெற்றி திரைப்பட குழுவினருக்கு மிகப்பெரிய  ஆச்சரியத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தற்போது அந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் குவிந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் ஜவான் திரைப்படத்திற்கு உலக அளவில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான  டாரஸ் வேர்ல்டு ஸ்டண்ட் அவார்ட்ஸ்க்கு தற்போது தேர்வாகியுள்ளது. இது ஸ்டண்ட் காட்சிகளில் உள்ள படங்களை தேர்வு செய்து அவற்றிற்கு வழங்கும் ஒரு அவார்டாகும். 

இந்த வரிசையில் தற்போது ஜவான் திரைப்படம் இதற்காக தேர்வாகியுள்ளது மேலும் வருகின்ற மே 11ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்கின்ற நகரில் இந்த அவார்ட் பங்க்ஷன் நடக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜான்விக் 4, மிஷன் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்களுடன் போட்டியிடும் வகையில் தற்போது ஜவான் திரைப்படம் தேர்வாகியுள்ளது அந்த படக்குழுவினருக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகவும், அவார்ட் ஃபங்ஷனில் கலந்து கொள்வதற்காக படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்  அனல் அரசு அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் மகிழ்ச்சியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜவான் திரைப்படத்திற்கு  இந்த விருது கிடைக்க வேண்டும் என்று திரைப்பட குழுவினரும், சினிமா துறையில் உள்ளவர்களும் மற்றும் ரசிகர்களும் கூட தங்களின் கருத்துக்களை கூறி வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அட்லீ படம் என்றாலே காப்பி சர்ச்சைகள் இருக்கும் ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இப்படி உலக அளவிற்கு அட்லீ இயக்கிய படம் சென்றதற்கு தமிழ் திரையுலகமே அண்ணாந்து பார்க்கிறது...