Tamilnadu

"வேற லெவல்"... முதலிடம் பிடித்த காங்கிரஸ்.. தமிழக ஊடகங்கள் மறைத்தும் வெளிவந்தது..!

Congress
Congress

உத்திர பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது அனைவருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் காங்கிரஸ் செய்த சாதனை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை வட இந்திய ஊடகங்கள் அதனை எடுத்து சொல்லியும் தமிழக ஊடகங்கள் பல மவுனம் காத்து வருகின்றன.


சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 399 தொகுதிகளில் 387 இடங்களில் டெபாசிட் இழந்தது. அக்கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.  ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் போட்டியிட்டாலும் உத்திர பிரதேச வரலாற்றில் டெபாசிட் இழந்த கட்சி வரலாற்றில் காங்கிரஸ் முதலிடம் பிடித்துள்ளது.

காங்கிரஸ் பதிவான மொத்த வாக்குகளில் வெறும் 2.4% மட்டுமே பெற்றது, RLD போட்டியிட்ட 33 இடங்களில் பெற்ற வாக்குகள் 2.9% என்பது குறிப்பிட தக்கது  உ.பி. முழுவதிலும் இருந்து வருத்தமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் மார்ச் 14 அன்று டெல்லிக்கு அணிவகுத்துச் சென்று கட்சித் தலைமையகத்தை அடைந்து அங்கு சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

தயவு செய்து கட்சியை கலைத்து விடுங்கள் அல்லது கட்சி தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறி விடுங்கள் என ராகுல் காந்தி உள்ளிட்ட பலரை காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சி இப்போது நோட்டா உடன் போட்டியிடுவது அக்கட்சி தொண்டர்கள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) போட்டியிட்ட 403 இடங்களில் 290 இடங்களில் டெபாசிட் இழந்த மற்றொரு பெரிய கட்சியாகும்.  வெற்றி பெற்ற பாஜக கூட தான் போட்டியிட்ட 376 இடங்களில் மூன்றில் மட்டுமே டெபாசிட் இழந்தது மற்றும் அதன் வலுவான சவாலான சமாஜ்வாடி கட்சி (SP) அதன் 347 இடங்களில் 6 இடங்களில் டெபாசிட் இழந்தது.

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் (சோனேலால்) மற்றும் நிஷாத் கட்சி - தாங்கள் போட்டியிட்ட 27 இடங்களில் ஒன்றில் கூட டெபாசிட் இழக்கவில்லை. மாறாக காங்கிரஸ் இவ்வாறு டெபாசிட் இழந்து முதலிடம் பிடித்து இருப்பது அதன் வேற லெவல் சாதனையாக பார்க்க படுகிறது.