Cinema

அஜித் தான் எனக்கு போட்டியாளர் ..! குட்டி கதை சொல்லி உதயநிதிக்கு சிக்னல் கொடுத்த விஜய்..!

Vijay ajith
Vijay ajith

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்லி மொத்தமாக வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார் விஜய், விஜய் ரசிகர்கள் விஜயின் பேச்சை கொண்டாடி வந்தாலும் அரசியல் தரப்பில் சீமான் தொடங்கி பலரும் விஜய் பேச்சை நக்கல் அடிக்க தொடங்கி இருப்பது ஒருபுறம் என்றால் விஜய் குட்டி கதை மூலம் சொதப்பி இருப்பது தற்போது விமர்சனமாக மாறி இருக்கிறது.


விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்வது பெருமையாக இருக்கிறது. எனது ரசிகர்களின் இரத்த தானம் பற்றி நான் நீண்ட காலமாக பேச விரும்பினேன். இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாத ஒரே விஷயம் ரத்தம். குறைந்த பட்சம் இந்த ஒரு நல்ல குணத்தையாவது நாம் இரத்தத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றவர்..,

யாராவது உங்களை எதிர்த்து பிரச்சனை வந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை வாழவைக்குது.

1990களில் ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். அவர் எனக்கு எதிராக நின்றார். நான் எங்கு சென்றாலும் அவர் வந்தார். அவரின் வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன். நான் அவரை விட வெற்றிபெற விரும்பினேன், அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை. அந்த போட்டியாளர் உருவான ஆண்டு 1992. அவர் வேறு யாருமல்ல, அவர் பெயர் ஜோசப் விஜய். ஆம், எனக்கு நானே போட்டியாளர். உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. முதலில் உங்களுடன் போட்டியிடுங்கள், உங்களுக்கு நீங்களே சொந்த போட்டியாக இருங்கள்" என்று கூறினார் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்...,

விஜய் மறைமுகமா தனது பழைய போட்டியாளர். அஜித் என்பதை தான் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார் மேலும் தற்போது உதயநிதி vs விஜய் என்ற கருத்து வரும்போது அதை கூட தெளிவாக விஜய்யால் குறிப்பிட முடியவில்லை, உதயநிதி பெயரை குறிப்பிட கூட தயங்கும் விஜய் எப்படி வருங்கால அரசியலை சமாளிக்க போகிறார் என தெரியவில்லை என சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு எதிராக குரல்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும் மதத்தை வைத்து தற்போது அரசியல் செய்வது விஜய் தான் உண்மையில் ஜோசப் விஜய் என அழுத்தி சொல்லும் விஜய் அவரது திரைப்படங்களில் விஜய் என்பதற்கு பதிலாக ஏதேனும் ஒரு படத்திலாவது ஜோசப் விஜய் என்ற பெயரை போடா சொல்லுங்கள் அப்புறம் பார்க்கலாம் என கடுமையான விமர்சனங்கள் விஜய் மீது சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகிறது.

சொந்த தந்தை மனதை அறியாத விஜய் குடும்ப கதையில் நடிப்பதன் மூலம் நல்ல நடிகர் என்று நிரூபணம் ஆவாரே தவிர ஒரு நாளும் நல்ல மனிதர் என்று நிரூபணம் ஆகமாட்டார் என விஜய்க்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன.