Cinema

"பகாசூரன்" திரைப்படத்தில் நடிகையாக களம் இறங்கும் பிரபல இளம் பெண் அரசியல்வாதி !

Mohan ji
Mohan ji

மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பகாசூரன் சமீபத்தில் இதன் டீஷர் வெளியாகி வைரலாகி வருகிறது, டீசர் வெளியான சற்று நேரத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘பகாசூரன்’.  ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. 


இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நாடக காதல், மதமாற்றம், SC, ST சட்டத்தை மையப்படுத்தி படங்களை இயக்கிய மோகன், இந்த முறை பெண்கள் மற்றும் பெற்றோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ஒன்றை மையப்படுத்தி பகாசூரன் திரைப்படத்தை இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது, இதில் செல்வராகவன், நட்டி என முன்னணி சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் நடித்து இருந்தாலும்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இளம் நடிகை ஒருவரை நடிக்க வைத்து இருக்கிறார்களாம், அவர் அரசியல் கட்சிகளில் பயணித்தவர் என்றும் தேர்தல்களில் நின்று சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்தவர் என்றும் கூறப்படுகிறது. பகாசூரன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களில் அவரை குறித்து விவரத்தை மோகன் ஜி வெளியிடலாம் எனவும் அதுவரை அவர் குறித்த கதாபாத்திரதை சஸ்பென்சாக படக்குழு வைத்து இருக்கிறதாம்.

இப்போதே பகாசூரன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க படக்குழு முடிவு செய்து இருக்கிறதாம்.  யார் அந்த இளம் அரசியல் அறிமுக நடிகை என்பதை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.