24 special

நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு...! சிக்க போகும் நபர்கள் யார் யார்?


சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தமிழகத்தில் யூடுப் மூலம் பொய்களை பரப்பிய நபர்களுக்கு இடியாக விழுந்துள்ளது, விரைவில் பொய்களை பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் எனவும் இதில் முக்கிய பத்திரிக்கை துறையை சேர்ந்த நபர்கள் மூவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது .


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம் வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது,ககள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி கடந்த மாதம் பள்ளியின் விடுதியில் இருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

 இந்த மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கபடும் என தெரிவித்தார். அவர் வழங்கிய விரிவான உத்தரவில் பள்ளி நிர்வாகம் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்களை வெளுத்து எடுக்கும் வண்ணம் தீர்ப்பு கொடுத்துள்ளார் தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, 

 பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.

மாணவியின் தற்கொலை கடிதத்தில் இருந்துகூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம்.

அதனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார். படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது என கருத்து தெரிவித்த நீதிபதி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் ஸ்ரீமதி வழக்கில் நடந்தது கொலை அல்ல தற்கொலை என்பது தெளிவாக தெரிந்து இருக்கிறது, இதில் தற்போது நடைபெற்ற கலவரத்திற்கு காரணமே மாணவியை கொலை செய்து விட்டார்கள் என சிலர் கிளப்பிய சந்தேகம்தான் முதலில் மாணவி மர்ம மரணத்தை வைத்து தமிழக ஊடகங்கள் சில பகிர்ந்த செய்தியும், சில யூடுப் சேனல்கள் கிளப்பிய போலி செய்தியுமே கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு முக்கிய காரணமாக பார்க்க படுகிறது.

தற்போது மாணவி தற்கொலை செய்துகொண்டது உறுதியான நிலையில் பள்ளியை கொளுத்தி பல மாணவர்களின் கல்வி வாழ்க்கையை பாழக்கிய நபர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது எனவும், மேலும் போலி செய்திகளை தினமும் பகிர்ந்த பத்திரிகையாளர்கள், யூடுப்பர்கள் போன்றோரை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் இப்போதே பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

சிலர் வெளிப்படையாக கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவாகரத்தில் தினமும் போலி செய்தியை பகிர்ந்த ஜீவ சகாப்பதம் மற்றும் லிபர்ட்டி யூடுப் சேனல் நிர்வாகத்தினரை கைது செய்யவேண்டும் எனவும் வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

மாணவி தற்கொலை விவாகரத்தை வைத்து வேண்டுமென்றே கலவரத்தை பரப்பியவர்கள் என்ற வழக்கில் போலி செய்தியை பரப்பிய நபர்களை தமிழக காவல்துறை கைது செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற கலவரங்கள் தடுக்கப்படும் என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் போன்றோரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கை கொலை என பரப்பிய பல ஊடக வியாபாரிகள் சாயம் வெளுத்து இருக்கிறது. மேலும் போலி செய்தியை இனிமேலும் யாராவது பரப்பினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறை தயாராகி வருகிறதாம்.