24 special

பாஜகவுக்கு ஓட்டளித்த 15 திமுக எம்பிக்கள்! உடைந்தது காங்கிரஸ் கூட்டணி! அதிர்ச்சியில் கோபாலபுரம்!

MKSTALIN,C.PRADHAKRISHNAN
MKSTALIN,C.PRADHAKRISHNAN

துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி அடைந்து பதவியேற்றுள்ளார். எப்போதும் போல் திமுக தலைமை தமிழருக்கு ஆதரவு அளிக்கவில்லை.  சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவை வழங்கியத. துணை குடியரசு தேர்தல் முடிவுகள் தி.மு.க.,விற்கும், காங்கிரசுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 438 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் 452 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து நின்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு கிடைத்தது, 300 ஓட்டுகள் இதில், 15 செல்லாதவை. ஆகும்


இண்டி' கூட்டணியிலிருந்து யார் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு  ஓட்டளித்தது? என்ற கேள்விகள் தற்போது டெல்லி வட்டாரத்தை உலுக்கியுள்ளது . உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தி.மு.க., மற் றும் திரிணமுல் காங்கிரஸ்  - எம்.பி.,க்கள்  சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு  ஓட்டளித்து விட்டனர். 'அத்துடன், எங்கள் கூட்டணி எம்.பி.,க்கள் வேண்டுமென்றே செல்லாத ஓட்டுகள் அளித்து விட்டனர்' என, சில தலைவர்களிடம் கூறியுள்ளார்  காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

இது, தி.மு.க., தலைமைக்கு தெரியவந்ததும் கோபமடைந்த  மிகவும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக காங்கிரஸ் தலைமைக்கு போன் செய்து, 'தி.மு.க.,விலிருந்து யாரும் மாறி ஓட்டளிக்கவில்லை; எதற்கு இப் படி தேவையில்லாத பிரச்னையை ஜெய்ராம் கிளப்புகிறார்' என புகார் அளித்தார்கள்.  ஜெய்ராம் ரமேஷ் அவர்களுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் , உறவு சரியில்லை' என்கின்றனர் காங்கிரசார். இருப்பினும், -'தி.மு.க., எம்பிக்கள் தான் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனர் என்ற தன் நிலைப்பாட்டை, ஜெய்ராம் மாற்றிக் கொள்ளவில்லையாம். மேலும் தமிழகத்தில் விஜயுடனும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறார்களாம். இதனால் இந்த விஷயத்தை வைத்து கொண்டு திமுவை டிமாண்ட் செய்ய முடிவு செய்துள்ளது காங்கிரஸ். 

 டெல்லி தகவல்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.  தனது கட்சிக்காரர்கள் டெல்லியில் பாஜவுடனான தொடர்பில் இருக்கிறார்களா இல்லையா என டெல்லியில் விசாரிக்க சொல்லியுள்ளாராம்.  பல சீனியர் தலைகள் பெயருக்குத்தான் திமுகவில் உள்ளனர். ஆனால் அவர்கள் பாஜகவின் மேலிடத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கத்தான் செய்கின்றார்கள். என்ற தகவல் தான் முதல்வர் ஸ்டலைன் தலையில் இடியை இறக்கியுள்ளதாம். மேலும் அவர்களின் ஓட்டுக்கள்தான் இந்த 15 கூடுதலான ஓட்டுக்கள் என்பதை  திமுக தலைமைக்கு கூறியுள்ளார்களாம். மேலும் திமுகவை கழட்டிவிட்டு விஜயுடன் கை கோர்க்க தான் இந்த பழியை திமுக மீது போடுகிறார்கள் என்ற குற்ற சாட்டு எழுந்துள்ளது 

அதே சமயம் செல்லாத ஓட்டுக்களை போட்டவர்கள் யார் என்பதை இண்டி கூட்டணியினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில்  திமுக எம் பி க்கள்தான் கட்சி தாவுவார்களா என மாப்பிளை சபரீசனிடம் கூறி ஒரு டீம் அமைத்து குறிப்பிட்ட எம்.பிகளை கண்காணித்து வருகிறார்களாம்.  . ஆகமொத்தம் திமுக MP க்கள் எப்போது வேண்டுமானாலும் டெல்லி பக்கம் போகலாம் என்பதை தான்  இந்த துணை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் காட்டியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. . இதனால் ஸ்டாலினின் உச்ச கோபத்தில் இருப்பது உண்மைதான் ஆனால் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லையாம் .