
கடந்த வாரம் கத்தாரின் தலைநகருக்கு அருகே உள்ள ஹமாஸ் தலைமையகங்கள் சில நொடிகளில் சிதறி விழுந்தன. அதிர்ச்சியில் உலக ஊடகங்கள் “இஸ்ரேல் விமானங்கள் கத்தாரின் வான்வெளியில் நுழைந்து தாக்கின” எனக் கூச்சலிட்டன. ஆனால் உண்மை அதைவிடப் பெரியது. எந்த நாட்டின் வான்வெளியிலும் நுழையாமல், செங்கடல் மேல் சென்ற இஸ்ரேல் விமானங்கள் விண்வெளிக்கு ஏவுகணைகளை ஏற்றி, அங்கிருந்து கத்தாரைத் துல்லியமாகத் தாக்கியிருப்பது தான் நிஜம்.
கடந்த சில மாதங்களாக ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலை குறிவைத்து நடத்திய தாக்குதல்கள், ராக்கெட் மழைகள், குடியிருப்பு பகுதிகளில் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் – எல்லாம் சேர்ந்து இஸ்ரேலை ரணமாக்கியிருந்தன. ஹமாஸ் தலைமை தளம் கத்தாரில் பாதுகாப்பாக இருந்தது. அவர்களை அங்கே எட்ட முடியாது என்று உலகமே நம்பியிருந்தது. ஆனால் இஸ்ரேல் அமைதியாக தனது துல்லியமாக தாக்கும் ஆயுதத்தை தயார் செய்து கொண்டு இருந்தது.
இஸ்ரேலின் விமானங்கள் நேரடியாக கத்தாரின் வானில் நுழையவில்லை. செங்கடல் மேல் சென்று, அங்கிருந்து தொலை தூர ஏவுகணைகளை விண்வெளிக்கு ஏற்றின. வளிமண்டலத்தை கடந்த பிறகு அந்த உயரம் எந்த நாட்டுக்கும் சொந்தமானது அல்ல – சர்வதேச நீர்ப்பரப்பைப் போலவே அங்கிருந்து கத்தாரின் மீது ஏவுகணைகளை தொடுத்துள்ளது இஸ்ரேல் . ஒரு சிறிய கட்டிடத்தின் உள் அறையை துல்லியமாகத் தாக்கும் அளவுக்கு அந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது
சவுதி, சிரியா, கத்தார் – யாரும் தங்கள் வான்வெளி பயன்படுத்தப்படவில்லை என அறிவித்தனர். அமெரிக்காவே கூட, “இந்த தாக்குதலுக்கு பின் தான் இஸ்ரேலின் திட்டத்தை அறிந்தோம்” என்று ஒப்புக்கொண்டது. உலகம் முழுவதும் ஒரு கேள்வி – இஸ்ரேல் எப்படி இவ்வளவு துல்லியமாக விண்வெளியிலிருந்து தாக்க முடிந்தது?
சர்வதேச ராணுவ நிபுணர்கள் இது ஒரு Game Changer என்கிறார்கள். “இது சாதாரண பாலிஸ்டிக் மிசைல் தாக்குதல் அல்ல. ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல். இலக்கை பின்தொடர்ந்து சென்று, கடைசி நொடி வரை திசைமாற்றம் செய்யும் திறன் கொண்டது. எந்த விமான எதிர்ப்பு அமைப்பும் இதை எளிதில் தடுக்க முடியாது” என மதிப்பிடுகின்றனர்.
காலித் மாஷல், அல் கியா ஆகியோர் உயிர்தப்பினாலும், அவர்களுக்கு இப்போது எங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பதை ஹமாஸை எந்த நாடும் பாதுகாக்க முடியாது” என்ற செய்தியை இஸ்ரேல் உலகத்திற்கு வெளிப்படையாகச் சொல்லி விட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்காசிய பிரச்சனையில் எப்போதும் “நான் தான் நடுவர்” என பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த தாக்குதலுக்கு பின் அவர் வாயைத் திறக்கவே முடியவில்லை. “நான் தான் போரை நிறுத்தினேன்” என சொல்ல முடியாத நிலை. இஸ்ரேல் தனது முடிவுகளை தானே எடுக்கும் வல்லமையை உலகிற்கு வெளிப்படையாகக் காட்டிவிட்டது.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பல வருடங்களாக ஆழமான ராணுவ கூட்டணி உள்ளது. ட்ரோன், ரேடார், ஏவுகணை பாதுகாப்பு – பல்வேறு நவீன நுட்பங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டன. இந்த புதிய விண்வெளி தாக்குதல் தொழில்நுட்பமும் இந்தியாவுக்கு விரைவில் வர போகிறதாம் . இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ஒரு சில நொடிகளில் சாம்பலாகும்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஒரு ராணுவ நடவடிக்கை மட்டும் அல்ல. உலக அரசியலில் ஒரு புதிய யுகத்தின் துவக்கம். விண்வெளியிலிருந்து துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் இனி எல்லா போர்களையும் மாற்றும். கத்தார், ஈரான், ஹமாஸ் மட்டுமல்ல – எந்த நாட்டும் இனி இஸ்ரேலை எளிதாக எதிர்கொள்ள முடியாது. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. இனி பாகிஸ்தானை நோக்கி சொல்லலாம்